[
Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், காலேஜில் ஈசியாக சர்டிபிகேட் வாங்கிடலாம் என நினைத்துப் போன நிலாவுக்கு சில ஏமாற்றங்கள் நடந்து விட்டது. அதாவது காலேஜில் சர்டிபிகேட் வாங்க முடியாது போலீஸ் ஸ்டேஷனில் சர்டிபிகேட் தொலைந்து போய்விட்டது என்று பைல் பண்ணி அந்த எஃப் ஐ ஆர் காப்பியை கொண்டு வந்து காலேஜில் கொடுத்த பிறகு யுனிவர்சிட்டிக்கு எல்லாத்தையும் அனுப்பி அதன் பிறகு தான் கையில் சர்டிபிகேட் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.
அதனால் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு காலேஜிலிருந்து ஒரு லெட்டர் கொடுத்து இருக்கிறார்கள். அதை எடுத்துட்டு நிலா காலேஜ்ல இருந்து கிளம்பும் பொழுது நிலாவின் அண்ணன் வந்துவிடுகிறார். நிலாவிடம் பிரச்சனை பண்ணி அடித்து வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அப்பொழுது வாக்குவாதம் ஆன நிலையில் நிலா வைத்திருந்த லெட்டரை அண்ணன் கிழித்து விடுகிறார்.
இதை பார்த்ததும் நடேசன், காரில் இருந்து இறங்கி நிலாவின் அண்ணனிடம் சண்டை போடுகிறார். உடனே நிலாவை காருக்குள் வைத்துவிட்டு நடேசன் கிளம்பும்பொழுது நிலாவின் அண்ணன் கத்தியால் நடேசன் கையை குத்தி விடுகிறார். பிறகு அங்கே பிரச்சினை ஏற்படும் நிலையில் காலேஜில் இருந்து வந்து எல்லோரையும் வெளியே அனுப்பி விடுகிறார்கள்.
உடனே நிலா, நடேசனை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்கிறார். நிலாவின் பதட்டத்தை பார்த்ததும் நடேசன் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை வலிக்கவும் இல்லை நீ கொஞ்சம் பதட்டப்படாமல் இரு என்று சொல்கிறார். பிறகு காயம் எதுவும் பெரிசாக இல்லாததால் வீட்டிற்கு போக சொல்கிறார்கள்.
அப்பொழுது காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலா,நடேஷனை பார்த்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்கணும். அதுக்கு சொல்ல முடிந்தால் சொல்லுங்க ஆனால் கோபம் மட்டும் படாதீர்கள் என்று பயத்துடன் கேட்கிறார். உடனே நடேசன் என்ன என்று கேட்கும் பொழுது நீங்கள் கொலை பண்ணி இருக்கீங்களா என கேட்கிறார். அதற்கு நடேசன் ஆமாம் பண்ணி இருக்கேன், நிறைய பண்ணி இருக்கிறேன்.
உங்கள் அண்ணனையும் பண்ணுவேன் என்று சொன்ன வார்த்தையை நம்பி நிலா ரொம்பவே பயந்து போய்விட்டார். அந்த பயத்துடனே வீட்டுக்கு வரும் வரை எதுவும் வாயை திறந்து பேசாமல் அமைதியாக வருகிறார். வந்ததும் வீட்டில் இருப்பவர்களிடம் காலேஜில் நடந்த விஷயத்தையும் நடேசன் வந்து காப்பாற்றினதையும் சொல்கிறார்.
ஆனால் எதனால் நடேசன் மனைவி இறந்தார். இரண்டாவதாக கல்யாணம் பண்ணிட்டு வந்த மனைவி ஏன் விட்டுட்டு போனார். குடும்பத்தில் என்ன மர்மம் மறைந்து இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் நிலாவுக்கு சேரன் குடும்பத்தின் ஃபிளாஷ்பேக் தெரிய வரும்.