[
Eleven Movie Review: லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், ரித்விகா என பலர் நடிப்பில் லெவன் வெளியாகி உள்ளது. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
போலீசுக்கு ஆட்டம் காட்டும் சீரியல் கில்லர் தான் படத்தின் ஒன் லைன். இப்படம் திரில்லர் விரும்பிகளை சந்தோஷப்படுத்தியதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
சென்னையில் அடுத்தடுத்த கொலை நடக்கிறது. ஆதாரத்தை மறைப்பதற்காக கொலைகாரன் உடலை எரிந்து விடுகிறான். இதை கண்டுபிடிக்கும் பொறுப்பு உதவி கமிஷனரான ஹீரோ கைக்கு வருகிறது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் மிரட்டியதா லெவன்.?
விசாரணையில் இறங்கும் ஹீரோவுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கிறது. அதை வைத்து அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இந்த தொடர் கொலைகளுக்கு காரணம் என்ன? சீரியல் கில்லரின் நோக்கம் என்ன? என்பது பற்றி சொல்கிறது இப்படம்.
பொதுவாக இன்வேஸ்டிகேஷன் திரில்லர் படங்கள் கதையை யூகிக்கும் படியாக இருக்கக் கூடாது. அப்பொழுது தான் சுவாரஸ்யம் நீடிக்கும்.
படத்திலும் அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர். அடுத்தது என்ன? கொலைகாரன் யார் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறது திரைக்கதை.
மேலும் பிளாஷ்பேக் காட்சிகள், ஹீரோ கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குனர்.
அதற்கேற்றார் போல் கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர். சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் தாராளமாக ஒருமுறை பார்க்கும் ரகம் தான்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 3/5