[
Rajini : ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். தற்போது 74 வயதானாலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் கூலி படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து ரஜினியின் படத்தை இயக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
அவ்வாறு எச் வினோத் உடன் ரஜினி கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளியான “Sherlock Holmes”படத்தைப் போல துப்பறியும் கதையை கொண்டது. இதுபோன்ற கதையை எடுப்பதில் வினோத் கை தெரிந்தவர்.
ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் ரஜினியின் படம்
அவ்வாறு திருட்டை மையமாக வைத்து வினோத் எடுத்த சதுரங்க வேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து அஜித்தை வைத்து பேங்க் ராபரி கதையை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார். இப்போது விஜய் பட வாய்ப்பு கிடைத்தது.
அவ்வாறு ஜனநாயகன் படத்தை எடுத்து வரும் வினோத் அரசியல் களம் சார்ந்து இந்த கதையை இயக்கி வருகிறார். அடுத்து ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாக உள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தச் சமயத்தில் தலைவரின் பட வாய்ப்பு அவருக்கு ஜாக்பாட் ஆகத்தான் அமைந்தது. எனவே ரஜினி மாஸ் சம்பவத்துடன் வினோத் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.