[
Dhanush : பொதுவாகவே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் சிலரின் ரசிகர்களாகத் தான் இருப்பார்கள். அவ்வாறு தான் விக்ரம் படத்தை கமலின் தீவிர ரசிகராக இருந்த லோகேஷ் இயக்கி இருந்தார்.
ஒரு ஃபேன் பாயாக இந்த படத்தை செதுக்கியிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் நடிகர் மணிகண்டன் கமலின் தீவிர ரசிகர். பல பேட்டிகளில் இதை வெளிப்படையாக சொல்லியதுடன் சத்யா படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறியிருக்கிறார்.
அவ்வாறு லோகேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் கமலின் தீவிர ரசிகர் யார் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தனுசுக்கு மிகப்பெரிய ரசிகன் என்றால் அது நான் மட்டும் தான். சட்டையை கிழிக்கிற மாதிரி சண்டை இல்ல புதுப்பேட்டை போல இறங்கி அடிக்கவும் தயார் என்று நடிகர் ஆனந்த் ராம் கூறியிருக்கிறார்.
தனுஷின் திடீர ரசிகராக இருக்கும் பிரபலம்
நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் நடித்தவர் தான் ஆனந்த் ராம். இந்த படத்தில் தனுஷ் தனக்காக ஆளாதே என்ற பாடலை பாடி இருந்ததாக பெருமையாக பேசியிருந்தார். மேலும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறியிருக்கிறார்.

ராமனுக்கு அனுமார் போல் தனுஷுக்கு இப்படி ஒரு ரசிகரா என பலரையும் வியக்க வைக்கிறது. மேலும் சினிமாவில் ஒரு வாய்ப்புக்காகவே பல இடங்களை தேடி அலைந்ததாகவும், அதன் பிறகு வெற்றி என்பது பெரிய காரியமாக தனக்கு இருந்ததாக கூறியிருக்கிறார்.
அதோடு சமீபத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்காக விருதையும் ஆனந்த் ராம் பெற்றிருந்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.