[
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தான் இப்போது பரபரப்பு செய்தியாக இருக்கிறார். சமீப காலமாக இவர் சோசியல் மீடியாவில் அதிகம் தென்பட்டு வருகிறார்.
ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கவனம் பெறுகிறார். இதை ப்ளூ சட்டை மாறன் இன்னும் பிற சினிமா விமர்சகர்கள் கூட கலாய்த்து வருகின்றனர்.
அதில் தற்போது பராசக்தி படத்தின் சிக்கல் பற்றி ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை கிளப்பி வருகிறது.
திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்
அவர் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன் சிம்பு, தனுஷ் கூட சிக்குவார்கள் என்கின்றனர். அதில் திடீர் தளபதிக்கு தான் திடீர் சிக்கல் வந்திருக்கிறது என ப்ளூ சட்டை கிண்டல் அடித்துள்ளார்.
முன்னதாக வணங்கான் படத்தில் சூர்யா விலகியதால் அருண் விஜய் நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேபோல் பராசக்தி படத்திலும் சூர்யா தான் நடிக்க இருந்தார்.
அவர் விலகியதால் சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். இதை வைத்து அவர் பல கணக்கு போட்டார். அதாவது இந்தி எதிர்ப்பு பற்றி தான் இப்படத்தின் கதை உள்ளது.
அதனால்தான் மத்திய அரசை பகைத்துக் கொள்ள முடியாது. அப்புறம் பான் இந்தியா கனவு போயிடும் என சூர்யா விலகினார். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போதைக்கு தமிழ்நாட்டு மக்களை கவர் செய்யலாம் என கணக்கு போட்டார்.
அதுவும் படத்தை தயாரிப்பது டான் பிக்சர்ஸ் வெளியிடுவது ரெட் ஜெயன்ட். அதனால் பெரிய சிக்கல் வராது. அது மட்டும் இன்றி ஜனநாயகன் படத்தோடு போட்டி போட போகிறோம்.
இப்படி பல கணக்குகள் போட்டு வைத்திருந்தார். ஆனால் அவை அனைத்தும் கலகலத்து போய்விட்டது. கதை தான் சர்ச்சை என்று பார்த்தால் நடக்குற சம்பவமும் அப்படித்தான் இருக்கிறது.
திடீர் தளபதிக்கு வந்த திடீர் பிரச்சனை எப்போதுதான் தீருமோ என ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கின்றனர். இப்படி ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார்.
இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும் பராசக்தி சொன்ன தேதியில் வெளியாகுமா என்பது கேள்வி குறிதான்.