[
Serial Trp Rating List: சின்னத்திரையை கலக்கி வரும் சீரியல்கள் தான் மக்களின் ஃபேவரிட் ஆக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெருகிறது என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்கும் ஆசை: சீதாவின் காதல் முத்துவுக்கு தெரிந்த நிலையில் நம்மிடம் மோதிய டிராபிக் போலீஸ் அருண் தான் சீதாவின் காதலன் என்று முத்து மீனாவிற்கு தெரிந்து விட்டது. இதனால் இந்த கல்யாணம் நடக்காது என்று மாமியாரிடம் கோபமாக சொல்லிவிட்டு சீதாவிற்கு வேற மாப்பிள்ளை பார்த்து கொண்டுவர முத்து தயாராகி விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.02 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: ஆதிரை போலீஸ் ஸ்டேஷனில் சித்திரவதை அனுபவிக்கிறார். பிரபு எப்படியாவது ஆதிரையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடுகிறார். நடந்த உண்மை என்னவென்று பிரபு, ஆதிரைடம் கேட்கிறார். ஆனால் ஆதிரை பிரபுவுக்கு உண்மை தெரியக்கூடாது என்பதற்காக எல்லாத்தையும் மறைத்து விடுகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.09 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: இந்த சீரியலை தயவு செய்து முடித்து விடுங்கள் என்று தொடர்ந்து கமெண்ட்ஸில் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு புதுசாக ட்ராக் எதுவும் இல்லாமல் பிரச்சனையை மட்டுமே காட்டி இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.84 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: நந்தினி அப்பா செக்யூரிட்டி வேலை பார்ப்பதை தெரிந்துகொண்ட சுதந்திரவல்லி மொட்டை மாடியில் நின்று பார்க்க சொல்லிவிட்டார். இதனால் வெயிலில் நின்று வேலை பார்ப்பதால் மயக்கம் போட்டு சுந்தரம் விழுந்து விடுகிறார். பிறகு நந்தினி, அப்பாவை காப்பாற்றி ட்ரீட்மென்ட் கொடுத்த பொழுது இதற்கு பின்னணியில் சுந்தரவள்ளியின் பிளான் இருக்கிறது என்று சூர்யா தெரிந்து கொண்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக செக்யூரிட்டி அனைவரையும் வரச் சொல்லி மதிப்பு மரியாதை செலுத்தி சுந்தரம் என்னுடைய மாமனார் என்று பெருமை படுத்தி விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.28 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: அன்புக்கு ஆனந்தியுடன் மூன்று மாதத்திற்குள் கல்யாணம் நடக்க வேண்டும், இல்லை என்றால் அன்புக்கு கல்யாணம் நடக்காது என்று ஜோசியக்காரர் அன்புவின் அம்மாவிடம் சொல்லிவிட்டார். இதனால் அன்புவின் அம்மா கல்யாணத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார். ஆனந்தியும் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்கும் விதமாக போராடுகிறார். மகேஷ், ஆனந்திக்கு உதவி பண்ணும் விதமாக அக்காவின் கல்யாணத்திற்கு வரும் பிரச்சனையை தடுக்க பார்க்கிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் கடந்த பல மாதங்களாக தேஞ்சு வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 8.95 புள்ளிகளை பெற்ற முதல் இடத்தில் இருக்கிறது.