[
Sun Tv Serial: சன் டிவி சேனலில் எவ்வளவு சீரியல் தான் வரிசையில் நிற்கிறது, புதுசு புதுசாக அடுக்கிக் கொண்டே இருக்காங்க. ஆனாலும் இவ்வளவு சீரியல் புதுசாக காத்துக் கொண்டிருக்கும் பொழுது இழுவையாக இழுத்தடிக்கும் பழைய சீரியல்களை ஓரம் கட்டாமல் அதை தேய்த்துக் கொண்டு வருவதால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் சரிவை சந்தித்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம் மாற்றும் விதமாக சன் டிவி, கைவசம் இருக்கும் சீரியல்களை இறக்கப் போகிறது. சமீபத்தில் வந்த ஆடுகளம் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியல் மூலம் அறிமுகமான ஆர்த்திகா நடிப்பில் வினோதினி என்ற சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.
அடுத்ததாக துளசி, பராசக்தி போன்ற சீரியல்களும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சன் தொலைக்காட்சியில் இன்னும் ஒரு புது சீரியல் வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் இலக்கியா என்ற சீரியலில் நடித்த ஹீமா பிந்து கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
இவருடன் சேர்ந்து இன்னொரு கதாநாயகி ஜீவிதாவும் கமிட்டாகி இருக்கிறார். இந்த இரண்டு கதாநாயகிக்கு நடுவே நாயகனாக வரப்போகும் ஹீரோ சந்தோஷ். இவர் ரஞ்சனி சீரியலில் ஹீரோவாக சீனு என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவருக்கு ஜோடியாக தான் ஹீமா பிந்து மற்றும் ஜீவிதா கமிட் ஆயிருக்கிறார்கள். இந்த சீரியலுக்கு இரு மலர்கள் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியல் இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது.