[
இந்த ஆண்டு அடுத்தடுத்த மாதங்களில் பெரிய பெரிய படங்கள் வெளிவர இருக்கிறது. ஜூன் 5ஆம் தேதி மாஸ்டர் கிளாஸ் மணிரத்தினத்தின் தக்லைப் படம் வெளிவர உள்ளது. அதைப் போல் ஜூலை மாதத்தில் பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் லிஸ்டில் உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
ரஜினியின் கூலி படம் ரிலீஸ் ஆவதால் அந்த மாதத்தில் தமிழில் எந்த ஒரு பெரிய படங்களும் வெளிவரவில்லை. இதனால் சோலோவாக பல திரையரங்குகளை ஆக்கிரமிக்க இருந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம். இப்பொழுது இந்த படத்திற்கு சவால் விடும் விதமாக உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் வெளிவர தயாராகிவிட்டது .
2019 ஆம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடிய படம் “வார்”. ரித்திக் ரோஷன், டைகர் செராப், வாணி கபூர் போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்து சக்கபோடு போட்டது. வெறும் 150 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 450 கோடிகள் வசூலித்து மரண மாஸ் காட்டியது. இதனால் அப்பவே அதன் இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் போட்டு வந்தனர்.
இப்பொழுது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டது. சுமார் ஆறு வருடங்கள் கழித்து ரிலீசாகும் இந்த படத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ரித்திக் ரோஷன், டைகர் செராப் இருவருக்கும் அங்கே ரசிகர் பட்டாளம் ஏராளம். இதனால் இந்த படமும் சுதந்திர தினத்தை குறி வைத்து வருகிறது.
வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான் ஆபிரகாம் புதிதாய் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு எல்லா மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது தமிழிலும் வெளிவர உள்ளது . இதனால் கூலி படத்தோடு மோத போகும் வரிசையில் புதுவரவாய் இந்த படம் இணைந்துள்ளது.