[
Dhanush : தனுஷ் இப்போ டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ராயன் படம் நல்துல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பெரிய அளவில் போகவில்லை.
இப்போது அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் ஜூலைக்கு தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் தான் இட்லி கடை. இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். தனுஷின் ராஞ்சனா, அட்ராங்கி படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வருகிறது தேரே இஸ்க் மேன்.
தனுஷ் கைவசம் இருக்கும் 12 படங்கள்
இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் தனுஷின் 55 ஆவது படம் உருவாகிறது. இதைத்தொடர்ந்து துருவ் விக்ரமின் பைசன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் தனுசுடன் கூட்டணி போட இருக்கிறார்.
அடுத்ததாக அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் போர் தொழில். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தனுஷ் படத்தை இயக்க உள்ளார். அதேபோல் ரப்பர் பந்து இயக்குனர் தமிழரசனும் லைன் அப்பில் இருக்கிறார்.
இதுதவிர இளையராஜா, அப்துல் கலாம் ஆகியோரின் பயோபிக் படங்களும் தனுஷ் கைவசம் இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கு பிறகு தனுஷ் உடன் இணைய உள்ள செய்தியை கூறியிருந்தார்.
ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் வினோத் உடன் தனுஷ் ஒரு படத்தில் கூட்டணி போட இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்போதைக்கு தனுஷின் லைன் அப்பில் 12 படங்கள் உள்ளது.