[
Gossip: சமீபத்தில் அந்த பெரிய தயாரிப்பாளர் தன் மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர்.
அதில் அந்த விவாகரத்து நடிகரும் வந்தார். ஆனால் அவர் தன் புது காதலியுடன் வந்தது தான் மீடியாக்களுக்கு சரியான தீனியாக அமைந்தது.
உடனே அத்தனை கேமராக்களும் மணமக்களை விட்டுவிட்டு இந்த ஜோடியின் பக்கம் திரும்பி விட்டனர். இருவரையும் வளைத்து வளைத்து படம் எடுக்க தொடங்கி விட்டனர்.
கடுப்பில் தயாரிப்பாளர்
இது நல்லா இருக்கே என நடிகரும் காதலியுடன் ரிசப்ஷனில் கலந்து கொண்டு பரபரப்பை அதிகப்படுத்தினார். இதனால் நடிகரின் மனைவி மட்டுமல்ல தயாரிப்பாளரும் நொந்து போய்விட்டார்.
கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணத்தை நடத்தினால் அடுத்த ஒரு வாரம் நம்ம வீட்டு விசேஷம் தான் மீடியாவில் பேசப்படும் என அவர் நினைத்திருக்கிறார்.
ஆனால் நடிகர் அதை அப்படியே தன் பக்கம் எடுத்துக் கொண்டார். அவருக்கு பப்ளிசிட்டியாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டது. அந்த கோபம் தயாரிப்பாளருக்கு இன்னும் போகவில்லையாம்.