[
Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்காக நிலா ஒரு பொண்ணு பார்த்து வைத்திருக்கிறார். அந்த பெண்ணுக்கும் சேரனை பிடித்து விட்டதால் ஃபோன் பண்ணி தொடர்ந்து பேசுகிறார். சேரனும் போன் பண்ணி பேசுகிறார், ஆனால் என்ன பேசுவது என்று தெரியாமல் சாப்பாடு விஷயத்தையும் வேலை செய்ற விஷயத்தையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்தப் பெண் இந்த மாப்பிள்ளை தனக்கு செட் ஆக மாட்டார் என்ற முடிவுக்கு வந்து நிலாவுக்கு போன் பண்ணுகிறார். நிலா போனில் பேசும் பொழுது அந்தப் பெண் எனக்கும் சேரனுக்கும் செட்டாகவில்லை. ரொம்ப போரிங்காக பேசுகிறார், இவர் என்னுடைய வாழ்க்கை துணையாக வந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது என்று சொல்லி இந்த சம்மதம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் நிலா எடுத்த முடிவு என்னவென்றால், சேரனை நன்றாக புரிந்து கொண்டவர்கள் மட்டும்தான் கல்யாணம் பண்ண முடியும் அப்பொழுது தான் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறார். அதனால் கார்த்திகா தான் சரிப்பட்டு வருவார் என்று முடிவு பண்ணி நேரடியாக கார்த்திகா வீட்டுக்கு தனியாக பேசப்போகிறார்.
அங்கே நிலா போனதும் கார்த்திகாவின் அம்மா அப்பா நிலாவை திட்டுகிறார்கள். ஆனால் நிலா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் போய்விடுகிறார். அப்பொழுது சேரன் குடும்பத்தை பற்றியும் சேரனை பற்றியும் நல்லவிதமாக எடுத்துச் சொல்கிறார். ஆனால் கார்த்திக்காம அதை புரிந்து கொள்ளாமல் திட்டி விட்டு இதற்கு நாங்கள் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார்கள்.
உடனே நிலா, கார்த்திகாவுக்கும் சேரன் அண்ணாவை பிடித்திருக்கிறது. சேரன் அண்ணாவுக்கும் கார்த்தியா மீது விருப்பம் இருக்கிறது. அதனால் இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கார்த்திகாவின் அம்மா, அப்பா, நிலாவை திட்டிவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.
ஒரு நாள் என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் நிலா இருக்கிறார். ஆனாலும் இந்த சம்பந்தத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவு பண்ணிய நிலா, சோழன் பல்லவன் மற்றும் பாண்டியனை கூட்டிட்டு பொண்ணுக்கு இருக்க போகிறார்கள். அப்பொழுதும் அவமானப்பட்டு தான் திரும்பி வரப்போகிறார்கள். ஆனால் இதற்கிடையில் கார்த்திகாவிற்கு சேரணை கல்யாணம் பண்ண சம்மதம் என்று சொல்லியதால் சேரன் மற்றும் கார்த்திகாவிற்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு முடிவெடுக்க போகிறார்கள்.