[
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா ட்ராபிக் போலீஸ் அருணை கூட்டிட்டு கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த முத்து மற்றும் மீனா, சீதாவின் காதலனை பார்க்கிறார்கள். பார்த்ததும் முத்து கோபப்பட்டு கோவிலில் இருந்து கிளம்பி விடுகிறார். சீதா எதற்காக மாமா போகிறார் என்று மீனாவிடம் கேட்கிறார்.
அதற்கு மீனா, இவரு யாரை ரவுடி என்று சொன்னாரோ அவர் தான் உங்க மாமா என்று சொல்லிவிட்டு முத்துவை சமாதானப்படுத்த போகிறார். ஆனால் முத்து இந்த கெட்ட புத்தி உள்ளவன் சீதாவுக்கு தேவையில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நேரடியாக மீனாவின் அம்மா வீட்டுக்கு போகிறார்.
அங்கே போனதும் மாமியாரிடம் தாம் தூம் குதித்து உங்க பொண்ணு காதலிக்கிறவன் நல்லவன் கிடையாது. மோசமானவன் அப்படிப்பட்டவன் இந்த குடும்பத்துக்கும் சீதாவுக்கும் தேவை இல்லை. கீதாவின் படிப்புக்கும் வேலைக்கும் ஏற்ற மாதிரி நான் ஒரு நல்ல மாப்பிள்ளையை கொண்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
சீதா வீட்டிற்கு வந்ததும் நீங்கள் எடுத்து சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அருணை பழிவாங்கும் விதமாக வில்லனாக மாறிவிட்டார். பிறகு கோவிலில் நின்ற சீதாவிடம் அருண், இவர்தான் உன்னுடைய மாமாவா என்று கேட்கிறார். ஆமாம் என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மீனா, சீதாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
அப்படி வந்த பொழுது சீதாவை மீனாவின் அம்மா அடித்து மாப்பிள்ளை சொல்வதை கேட்டு ஒழுங்கா நடந்து கொள். காதல் கல்யாணம் என்று உன் இஷ்டத்துக்கு நடந்து கொள்ளாதே என்று சீதாவின் காதலுக்கு எதிராக நிற்கிறார். பிறகு அழுது கொண்டிருக்கும் சீதாவிடம் மீனா ஆறுதல் சொல்லும் விதமாக உனக்கு அவரை ரொம்ப பிடித்து இருக்கிறதா, நீ நம்பறியா என கேட்கிறார்.
அதற்கு சீதா ஆமாம் என்று சொல்லிய நிலையில் அப்படி என்றால் கொஞ்சம் இந்த பிரச்சினையை அப்படியே விட்டுவிடு. நான் மாமாவிடம் பேசி உன்னுடைய கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி உன்னுடைய கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்து விடுகிறார்.
அடுத்ததாக மனோஜ்க்கு நண்பர் கொடுத்த அட்வைஸ் என்னவென்றால் இப்படித்தான் என் நண்பர் பொண்டாட்டியிடம் கோபப்பட்டு ரொம்ப நாள் பேசாமல் இருந்தார். உடனே அவனுடைய மனைவி வேறு ஒருத்தருடைய மனைவியாகிவிட்டால் என்று பயமுறுத்தி விட்டார்.
இதனால் பயந்து போன மனோஜிடம் வீட்டுக்கு வந்த ரோகினி நீ இப்படியே உங்க அம்மா பேச்சை கேட்டுக் கொண்டு என்னிடம் பேசாமல் இருந்தால் நான் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுப்பேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார். உடனே பயந்து போன மனோஜ், ரோகினி மீது இருந்த கோபத்தை மறந்து விட்டு மறுபடியும் பேச ஆரம்பித்து விடுகிறார்.