[
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சுகன்யா குமரவேலு சொன்னதை நம்பி அரசியை தனியாக அனுப்பி வைத்து விட்டார். அதனால் அரசி குமரவேலு கஸ்டடியில் சிக்கிக்கொண்டார். இது தெரியாம சுகன்யா அரசி வந்து விடுவார் என்று இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் வரவில்லை என்று தெரிந்ததும் எதுவும் தெரியாதபோல் கமுக்கம் ஆகிவிட்டார்.
இன்னொரு பக்கம் பாண்டியன் கல்யாண வேலையில் பிஸியாக ஒவ்வொரு விஷயத்தையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை கொடுக்கிறார். அப்பொழுது அரசி எழுந்து கிளம்பிட்டாளா என்று பாண்டியன் கேட்கிறார். உடனே மீனா மற்றும் ராஜி நாங்கள் பார்த்துட்டு வருகிறோம் என்று சொல்லி வீடு முழுவதும் தேடிப் பார்க்கிறார்கள்.
ஆனால் அரசி காணவில்லை என்றதும் பாண்டியனிடம் வந்து சொல்கிறார்கள். உடனே கதிர் மற்றும் செந்தில் என அவர்களும் தேடி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காணவில்லை என்றதும் வீட்டிற்கு வந்த சொந்தக்காரர்கள் அனைவரும் குமரவேலுடன் ஓடிப் போய்விட்டாரா என்று பைக் வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பாண்டியர் மற்றும் கோமதி நொறுங்கிப் போய் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
அரசி தான் வேண்டுமென்றே இந்த மாதிரி பண்ணி இருக்கிறார் என்று அரசியும் தப்பா நினைக்கிறார்கள். அப்பொழுது குமரவேலு என்ன பண்ணுகிறான் என்று பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்லி எல்லோரும் கிளம்பே பொழுது சுகன்யா எல்லோரும் போனா இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்து விடும். நான் யாருக்கும் தெரியாமல் குமரவேலு என்ன செய்கிறான்,அங்கே இருக்கிறானா என்று பார்த்துட்டு வருகிறேன் என சொல்லி சுகன்யா, சக்திவேல் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.
அங்கே போனதும் சக்திவேல் விடும் குமரவேலு எங்கே என்று கேட்கிறார். அதற்கு சக்திவேல் நேற்றிலிருந்து அவன் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்கிறார். உடனே சுகன்யா நடந்த விஷயத்தை சக்திவேலிடம் சொல்ல, சக்திவேல் மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு இதுதான் எனக்கு தேவை பாண்டியன் அவமானப்பட்டு நிற்கப் போகிறான் என்று வன்மத்தை காட்டுகிறார்.
அந்த வகையில் குமரவேலு போட்ட பிளான் வெற்றிகரமாக முடிய போகிறது என்பதற்கு ஏற்ப அரசு கழுத்தில் தாலி கட்டவும் இல்லை கஷ்டப்படுத்தவும் இல்லை. ஆனால் தற்போது அரசி காணவில்லை என்று ஒட்டுமொத்த குடும்பமும் பரிதவித்து நிற்கும் இந்த சமயத்தில் குமரவேலு அரசியை கூடிட்டு வந்து நிற்கப் போகிறார். இதனால் பாண்டியன் ஏற்பாடு பண்ணிய கல்யாணம் நிற்கப் போகிறது.
அரசி விஷயத்தை நினைத்து பாண்டியன் குடும்பம் நொறுங்கிப் போய்விட்டது. இதனை எடுத்து அரசி மீது எந்தத் தவறும் இருக்காது என புரிந்து கொண்டு சதீஷ் அரிசி கழுத்தில் தாலி கட்ட வாய்ப்பு இருக்கிறது.