[
Blue Sattai Maran : ப்ளூ சட்டை மாறன் ஒரு சின்ன துப்பு கிடைத்தால் போதும் அதை பற்றி வச்சு செய்யக்கூடியவர். அப்படிதான் இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பற்றி தயாரிப்பாளர் போட்ட ட்வீட்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது சமீபத்தில் புதுமுக இயக்குனர் ஒருவரை பெரிய ஹீரோ அவமானப்படுத்திய செய்தி பூதாகரமாக வெடித்தது. இதற்கு பலரும் அந்த இயக்குனர் பக்கம் தான் நின்றனர். அவருக்கு தான் சப்போர்ட் செய்து வந்தனர். ஆனால் தனஜெயன் போட்டுள்ள ட்வீட்டை ப்ளூ சட்டை விமர்சித்திருக்கிறார்.
அதாவது தனஜெயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி பேசாதே, பேக் ஃபயர் ஆகும். ஜெயிச்ச பிறகு பேசவே பேசாத, வெற்றியைப் பற்றி உலகமே பேசும் அது போதும் என்று கூறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில், அறிமுக இயக்குனர்கள் ஒரு படத்தை எடுத்து முடிப்பதே வெற்றி தான். அவர்கள் எதை எப்போது பேச வேண்டும் என சொல்ல நீங்கள் யார். கோடம்பாக்கத்தில் நடக்கும் பஞ்சாயத்தில் வலியோரின் பக்கம் நிற்பது நீங்கள் தான்.
தயாரிப்பாளரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்
மேலும் கங்குவா படம் ஜெயிப்பதற்கு முன்பே ஓவர் பில்டப் கொடுத்தீர்களே. அப்போது அறிவுரை சொல்ல வாய் வரவில்லையா. ஒரு படம் ரிலீசுக்கு முன்பே ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று 100 பேட்டிகள் கொடுத்துள்ளீர்கள்.
இந்த படங்கள் ஆயிரம் கோடி வசூலிக்குதோ இல்லையோ நீங்கள் கொடுக்கும் பேட்டி ஆயிரத்தை கடப்பது உறுதி. பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியானால் அனைத்து ஸ்கிரீன்களையும் பிடித்துக் கொள்கிறது. இதனால் கிடைக்கிற கேப்பில் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட்ட வருகிறார்கள்.
மேலும் பெரிய ஹீரோக்கள் படங்கள் மொத்த தியேட்டர்லையும் வெளியாகி ஆயிரம் கோடி வசூலித்தால் அதில் என்ன பெருமை வெங்காயம் வேண்டி இருக்கிறது. மெய்யழகன் மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களை லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சின்ன படங்கள் வீழ்த்தியது நினைவிருக்கட்டும்.
மேலும் உங்கள் பொன்னான அறிவுரைகளை பெரிய ஹீரோக்கள் மற்றும் பெரிய தயாரிப்பாளர்களிடம் கூறி அவர்களை திருத்த பாடம் எடுங்கள். புதிய இயக்குனர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் ஆகியோரை வாழ வழிவிடுங்கள் என தனஜெயன் பதிவுக்கு ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்து இருக்கிறார்..