[
Shankar : பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்தை கொண்டவர் தான் ஷங்கர். தன்னுடைய முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி அவரது படங்கள் எல்லாமே மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு அவரது கேரியரில் முக்கியமான படமாக இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற படங்கள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக புதிய தொழில்நுட்பத்தை தனது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் போகவில்லை. இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியை கொடுத்து வந்தார். இந்த சூழலில் ஷங்கர் பட எடிட்டர் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷங்கர் மீது குற்றச்சாட்டை வைத்த பிரபலம்
அங்கமாலி டயரீஸ், நரிவேட்டை போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் தான் ஷமீர் சார்லி. இவர் தான் கேம் சேஞ்சர் படத்திற்கும் எடிட்டராக ஆரம்பத்தில் பணியாற்றி இருக்கிறார். மொத்தம் படத்தையும் 7.30 மணி நேர படமாக ஷங்கர் ஒப்படைத்தாராம்.
இதை மூன்று மணி நேரம் படமாக கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சென்னையிலேயே தங்கி இருந்தாராம். மேலும் இந்த படத்திற்காக மூன்று வருடங்கள் பணியாற்றிய பின்பு அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதன் பிறகு கேம் சேஞ்சர் படத்தில் எடிட்டராக ரூபன் பணியாற்றி இருந்தார்.
மேலும் ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவமாக தனக்கு இருந்ததாக ஷமீர் சார்லி கூறியிருக்கிறார். மேலும் ஏழரை மணி நேரம் படம் எடுத்த காசுல எத்தனையோ சின்ன திரைப்படங்களை எடுத்து இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இதைக் கேட்ட பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தயாரிப்பாளரின் காசை இப்படியா ஷங்கர் கரைப்பது. கேம் சேஞ்சர் படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது என்றும் கூறியிருக்கின்றனர்.