[
Vijay Sethupathi : விஜய் சேதுபதி வளர்ச்சி சினிமாவில் அபரிவிதமானது என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. அதோடு ஓடிடியிலும் வெளியாகி பட்டையை கிளப்பியது.
இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ஏஸ். இந்த படத்தில் யோகி பாபு காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
அதாவது ஏஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் நிறைய பேருக்கு இந்த படம் ரிலீஸ் ஆனது தெரியவில்லை. இது எங்கள் மீது தவறு தான். நாங்கள் படத்தை பிரமோஷன் செய்யவில்லை. ஒரு சில காரணங்களினால் படத்தை உடனடியாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தக் லைஃப் படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி
ஆனாலும் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தை பிரமோஷன் செய்யவே கிட்டத்தட்ட 25 நாட்கள் தேவைப்படுகிறது என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
அதாவது கமல் படமாக இருந்தாலும் ப்ரமோஷன் செய்தால் தான் ஓடம் கட்டாயத்தில் இருப்பதாக விஜய் சேதுபதி இதன் மூலம் கூறியிருக்கிறார். முன்பு அஜித் நல்ல படங்கள் இருந்தால் கண்டிப்பாக மக்கள் பார்ப்பார்கள்.
அதற்கு எந்த பிரமோஷனும் தேவையில்லை என்று கூறியிருந்தார். ஆனால் விஜய் சேதுபதி இப்போது படங்கள் வெளியானால் கண்டிப்பாக பிரமோஷன் தேவை என்பதை கூறி இருக்கிறார். சத்தமே இல்லாமல் வெளியான லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.