[
Kamal : கமலஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதால் படத்திற்கான ப்ரோமோஷன் பயங்கரமாக நடந்து வருகிறது. இதற்காக கமல் பல்வேறு இடங்களில் பிரமோஷன் செய்து வருகிறார்.
அப்போது இப்படத்தின் டைட்டில் குறித்து கமல் பேசியிருக்கிறார். அதாவது முதலில் இந்த படத்தின் டைட்டிலை சம்பவாமி யுகே யுகே என்ற வைக்கலாம் என கமல் கூறினாராம். இந்தக் கூற்று கிருஷ்ணர் கூறியதாம். அதாவது ஒருவர் மீண்டும் மீண்டும் அவதரிப்பது தான் இதன் பொருள்.
படத்தின் கதாநாயகன் இறந்ததாக நம்பப்படும் நிலையில் மீண்டும் எவ்வாறு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஆகையால் தலைப்பு பொருந்தும் என்ற யோசித்தனராம். ஆனால் வடமொழி மேல் எனக்கும் மணிரத்னத்திற்கும் பெரிய மரியாதை இல்லை.
தக் லைஃப் படத்தின் டைட்டில் சர்ச்சை
இது வெறும் உபயோக கருவி தான். அது புரியவும் புரியாது. இப்படி பல தலைப்புகள் கூறி வந்த நிலையில் கடைசியில் தக் லைஃப் என்று கூறியதற்கு மணிரத்னம் சரி என்று சொன்னதாக கமல் கூறியிருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது.
இதுவரை தமிழிலேயே பெயர் வைத்து வந்த மணிரத்னம் கமலால் முதல் முறையாக ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார். மேலும் வடமொழியில் பிடிக்கவில்லை என்ற ஆங்கிலத்தில் வைத்துள்ளார்களே. இதுதான் தமிழ் பற்றா என்று பலரும் கேட்டிருக்கின்றனர்.
அதோடு வடமொழி டைட்டில் வைக்கவில்லை என்றால் உங்களது படங்களில் தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர் வைத்ததன் காரணம் என்ன. அது மட்டுமல்லாமல் உங்களுடைய மகளுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா என்று கமலை விமர்சித்து வருகிறார்கள்.ொ