‘முத்த மழை’ பாட்டுக்கே ஆடி போனா எப்படி?. சின்மயி குரலில் இந்த 6 பாட்டை மிஸ் பண்ணாம கேட்டுடுங்க! – Cinemapettai

Tamil Cinema News

Chinmayi: ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுறது என்று சொல்வார்கள். அதுதான் பின்னணி பாடகி சின்மயிக்கு நடந்து இருக்கிறது. தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

கடந்த ஆறு வருடங்களாக சின்மயி தமிழ் சினிமாவில் பாடக்கூடாது என தடை செய்யப்பட்டிருப்பதே பல ரசிகர்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. இந்த ஒரு பாட்டுக்கே சின்மயிக்காக குரல் கொடுப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு பாடலை அவருடைய குரலில் கேட்டு விடுங்கள்.

6 பாட்டை மிஸ் பண்ணாம கேட்டுடுங்க!

காதலே காதலே (96): விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் வரும் காதலே காதலே பாடல் சின்மயி பாடியதுதான்.

கோவிந்த் வசந்தா இசையில் இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. நான்கே வரி பாடல் என்றாலும் இன்று வரை இசை ரசிகர்களின் ஃபேவரிட் ஒன்றாக இருக்கிறது.

ஆருயிரே மன்னிப்பாயா: அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் வெளியான குரு படத்தில் வந்தது தான் ஆருயிரே மன்னிப்பாயா பாடல்.

இந்த பாடலை சின்மயி தமிழ் மற்றும் இந்தியில் பாடி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையில், வைரமுத்துவின் வரியில் உருவான இந்தப் பாடலுக்கு சின்மயி தன்னுடைய தீர்க்கமான குரலால் உயிர் கொடுத்திருப்பார்.

சர சர சாரக்காத்து: விமல் மற்றும் இனியா நடிப்பில் உருவான வாகை சூடவா படத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.

அதில் சின்மயி பாடிய சரசர சாரக்காத்து பாடலுக்காக பல விருதுகள் அவரை கௌரவித்தது. மேலும் இந்த படம் இசை இயக்குனர் ஜிப்ரானுக்கு பெரிய அடையாளமாகவே மாறிப்போனது.

ஒரு தெய்வம் தந்த பூவே: சின்மயி பாடிய சிறந்த பாடல்களின் லிஸ்டில் எப்போதுமே ஒரு தெய்வம் தந்த பூவே பாடலுக்கு இடம் உண்டு.

ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த பாடலின் மூலமாகத்தான் சின்மயி தமிழ் சினிமாவிற்கு பின்னணி பாடகியாக அறிமுகமானார். இந்தப் படமும் பல கேட்டகிரிகளில் விருதுகளை வாங்கி குவித்தது.

மைய்யா மைய்யா: ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில், வைரமுத்து வரிகளில் குரு படத்தில் இடம்பெற்ற பாடல் தான் மைய்யா மைய்யா.

இந்த பாடலை சின்மயி உடன் சேர்ந்து பல வெளிநாட்டு கலைஞர்களும் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடல் இந்திய அளவில் பெரிதாக பாராட்டை பெற்றது.

என்னோடு நீ இருந்தால்: விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான படம் ஐ. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இந்த படத்தில் வெளியான எல்லா பாடல்களுமே மக்களிடையே நல்ல கவனத்தை பெற்றது. இதில் முக்கியமான பாடல் தான் என்னோடு நீ இருந்தால்.

பியூட்டி அண்ட் பீஸ்ட் என்ற கதையை கருவாகக் கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.