இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 20 படங்கள்.. டூரிஸ்ட் ஃபேமிலி எதில் தெரியுமா.? – Cinemapettai

Tamil Cinema News

This Week OTT Release Movies : ஜூன் முதல் வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த பல படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் கமலின் தக் லைஃப் மற்றும் காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்டினி ஆகிய படங்கள் வெளியாகிறது. இப்போது இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

முதலாவதாக ஜூன் இரண்டாம் தேதி தியேட்டரில் சக்கை போடு போட்ட டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார், சிம்பிளி சவுத் மற்றும் டென்ட் கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி இருக்கிறது. அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் கடந்த வருடம் வெளியானது.

இப்படம் ஜூன் 6-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் பெல்லிக்கனி பிரசாத் படம் ETvwin ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதே தளத்தில் தெலுங்கில் உருவான டியர் டாடி படமும் ஜூன் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஜூன் முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ஜியோ ஹாட்ஸ்டாரில் Ocean, Resident Alien, Predator killer of killers, Get Away, Y2K, Night Court season 3, Below deck, Gajaana ஆகிய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. Netflix ஓடிடி தளத்தில் Sara, Power Movies With Shaquille O’Neal, Ginny And Georgia, Mercy For None, ko, Becoming Led Zeppelin ஆகிய படங்கள் வெளியாகிறது.

மேலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் Magic Farm, Hurry Up Tomorrow, Emmanuelle, Sinners ஆகிய படங்கள் வெளியாகிறது. Hulu ஓடிடி தளத்தில் Presence என்ற ஆங்கில படம் வெளியாகிறது. Zee 5 ஓடிடி தளத்தில் இந்தி படமான Chhal Kapat என்ற படம் வெளியாகிறது.

இவ்வாறு இந்த வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாவதால் எந்த படத்தை பார்ப்பது என்று ரசிகர்களுக்கே குழப்பங்கள் ஏற்படும். கண்டிப்பாக ஓடிடியிலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.