தக் லைஃப் படத்தின் நல்லது, கெட்டது இதுதான்.. கமல் சிம்புவை காப்பாற்றினாரா மணிரத்தினம் – Cinemapettai

Tamil Cinema News

38 வருடம் கழித்து கமல்-மணிரத்தினம் கூட்டணியில் தக் லைஃப் படம் இன்று உலகளவில் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் கமலஹாசன் உடன் சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அப்பா மகனுக்குள் நடக்கும் கேங்ஸ்டர் கதை தான் யார் அந்த இடத்தை பிடிக்கிறார் என்பது போன்ற கதையை தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்து விட்டோம். செக்க சிவந்த வானம் சமீபத்தில் வந்த ரெட்ரோ பட சாயலை அங்கங்கே ஈசியாக கனெக்ட் செய்துவிடலாம்.

படத்தில் இருக்கும் நல்லது கெட்டது என்னவென்று தற்போது பார்க்கலாம். கமலஹாசனை De-aging பன்னி வரும் 15 நிமிடம் Vintage portion மிக அற்புதமாக இருக்கும். சிம்பு ஒரு ஒரு காட்சிகளிலும் மக்கள் மனதில் நின்று விட்டார் என்றே கூறலாம். கமலஹாசன் எமோஷனல் மற்றும் சண்டை காட்சிகளில் மிக அற்புதமாக நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமானின் பேக்ரவுண்ட் இசை ஆங்காங்கே மிரட்டி விட்டு செல்லும். குறைந்தது 3,4 Goosebumps சீன்கள் கண்டிப்பாக எதிர்பார்த்து போகலாம்.

படத்தில் நெகட்டிவ் என்று பார்த்தால் த்ரிஷாவின் கதாபாத்திரத்தை மிக மட்டமாக காமித்துள்ளனர். முதலில் கமலஹாசன் உடன் நெருக்கமான உறவில்(மனைவி மாதிரி) வரும் த்ரிஷா 2ம் பாதியில் சிம்புவுடன் ஜோடி போடுகிறார். ஒரு சில இடங்களில் VFX எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை. 

சில முக்கிய கதாபாத்திரங்களை பயன்படுத்தவே இல்லை என்று தான் கூற வேண்டும். விண்வெளி நாயகன் பாடல் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிளைமாக்ஸில் வைக்கப்பட்டது இன்னும் ரசிகர்களுக்கு ஏமாற்றம். அதேபோல முத்த மலை பாடல் சுத்தமாக கட் செய்யப்பட்டு உள்ளது நன்றாகவே தெரிகிறது.

எது எப்படியோ மணிரத்தினம்-கமல் காம்போவிற்காக இந்த படத்தை ஒரு தடவையாவது பார்த்து பார்க்கலாம் என்பதுதான் நடுநிலையான விமர்சனமாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டி இரண்டு வருடம் கழித்து சிம்பு திரையில் மிரட்டி உள்ளார், அவருக்கு தக் லைஃப் ஒரு Come Back படம் என்று மாறுதட்டி கூறலாம். செக்க சிவந்த வானம் படத்திலிருந்து அதே கெத்தான கதாபாத்திரத்தில் சிம்பு ஒத்த ஆளா பல இடத்தில் கைதட்டல்களை வாங்கி உள்ளார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.