டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. ஆனந்தி நந்தினியை பின்னுக்கு தள்ளிய சீரியல் – Cinemapettai

Tamil Cinema News

Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத படி பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. அதைப்பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: மக்களின் பேவரிட் சீரியலாக ஜீ தமிழில் கொண்டாடப்படும் சீரியல் கார்த்திகை தீபம். இதில் கார்த்திக் நடிப்பு மக்களை கவர்ந்ததால் இந்த சீரியல்தான் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. அப்படி இந்த வாரம் 6.15 புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் இருக்கிறது.

எதிர்நீச்சல்: ஒரு காலத்தில் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது இந்த சீரியலை தயவு செய்து முடித்து விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு மொத்த வன்மத்தை காட்டி வருகிறார்கள். இதனால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.52 புள்ளிகளை பெற்று 9ஆவது இடத்தில் இருக்கிறது.

மகாநதி: விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலாக இருக்கும் மகாநதி சீரியல் இந்த வாரம் 6.71 புள்ளிகளை பற்றி 8வது இடத்தில் இருக்கிறது. வெண்ணிலா கோமா நிலைமைக்கு போன நிலையில் விஜய் தலைமறைவாக இருக்கிறார். விஜய்க்கு வந்த பிரச்சினையை சமாளிக்கும் விதமாக காவிரி முயற்சி எடுத்து வருகிறார்.

சிறகடிக்கும் ஆசை: டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 7.32 புள்ளிகளைப் பெற்று 7வது இடத்திற்கு போய்விட்டது. மொத்தமாக கதை சொதப்பிவிட்டது என்பதற்கு ஏற்ப ட்ராக் தடுமாறிக் கொண்டு வருகிறது.

அன்னம்: கார்த்திக்கின் ஆபீஸராக வந்திருக்கும் ரம்யா, கார்த்திக்கை பார்க்க விரும்பாமல் வெறுப்பை காட்டுகிறார். ரம்யாவை சமாளிக்க முடியாமல் கார்த்திக் தடுமாறுகிறார். கார்த்திக்கின் மனநிலைமை புரியாமல் அன்னம் பாவமாக நிற்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.49 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. இதே மாதிரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலும் இதே புள்ளிகளை பெற்ற ஆறாவது இடத்தில் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: முதல் முறையாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிக புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.68 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

மருமகள்: எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக மருமகள் சீரியல் நான்காம் இடத்தில் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.87 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: கடந்தவாரம் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.57 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒரே மாதிரியான கதையை கொண்டு வருவதாலும் சூர்யா வழக்கம்போல் குடித்துவிட்டு நந்தினையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும் தான் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்க பெண்ணே: ஆனந்தி கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற உண்மை யாருக்கும் தெரியாத பட்சத்தில் கதையை இழுத்து அடித்துக்கொண்டு வருவதால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 8.60 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது.

கயல்: பல மாதங்களுக்கு அடுத்து மறுபடியும் கயல் சீரியல் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.63 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.