Memes: தக் லைஃப் படத்தை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். சுற்றி சுற்றி நடந்த பிரமோஷன் முடிவில் இன்று படம் வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்த பலரும் இப்போது தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் கொட்டி வருகின்றனர். அதில் சிலர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் பலர் நாயகனை விட இந்த படம் நல்லா இருக்கும்னு சொன்னிங்களே கமல் சார் இப்படி ஏமாத்திபுட்டீங்களே என புலம்புகின்றனர். இந்தியன் 2 படமே இதுக்கு பரவாயில்லைன்னு சொல்ல வச்சிட்டீங்க.

ஜெயம் ரவி, துல்கர் சல்மானுக்கு இந்த படம் காஸ்ட்லி மிஸ் கிடையாது. ஜஸ்ட் மிஸ், நல்ல வேளை படத்தை பார்த்துட்டு உயிரோட திரும்பி வந்துட்டோம் என கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் சில குறும்புக்கார நெட்டிசன்கள் கண்டிப்பா கமல் மன்னிப்பு கேட்டு ஆகணும். தக் லைஃப் படத்த காசு செலவு பண்ணி எங்களை பார்க்க வச்சதுக்கு என நக்கல் அடித்து வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் படம் பற்றிய பல மீம்ஸ் பரவி வருகிறது. அதில் பார்த்ததும் நம்மை சிரிக்க தூண்டிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

