இளையராஜா மத்தியில் இப்படி ஒரு தியாகராஜன்.. புல்லரிக்க வைத்த சம்பவம் – Cinemapettai

Tamil Cinema News

Ilayaraja : இளையராஜா தன்னுடைய பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தினால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.

ஆனால் அந்தப் பாடல்கள் காப்புரிமை உள்ள இடத்தில் அனுமதி வாங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. அதேபோல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இப்படி இருக்கும் சூழலில் எல்லோரையும் புல்லரிக்கும்படி பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பேசியிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. அதாவது சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் அமோக வரவேற்பை பெற்றது.

மெய்சிலிர்க்க வைத்த தியாகராஜன்

இந்த படத்தில் மம்முட்டியான் பாடல் இடம் பெற்றது. இது தியேட்டரில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இசையமைத்த தமன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் மம்முட்டியான் படத்தை இயக்கி, தயாரித்த தியாகராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதாவது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்முட்டியான் பாடலை பயன்படுத்த தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் பலரும் தன்னிடம் வந்து வழக்கு போடுங்கள், பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு தோணவில்லை.

ஏனென்றால் அந்தப் பாடல் மீண்டும் ஹிட் ஆனது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதனால் நான் தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். உண்மையிலேயே இவர் தியாகராஜன் தான், இளையராஜா மத்தியில் இப்படி ஒருவரா என பலரும் கூறிவருகின்றனர்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.