Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு அரசியை கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க தான். ஆனாலும் அரசியை காதலிக்கும் பொழுது மனதார தான் காதலித்தார். ஆனால் அதன்பின் அரசி வேறு ஒரு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்ததும் பாண்டியன் மீது இருந்த கோபத்தை விட அரசி மீது கோபம் அதிகமாகிவிட்டது.
அதனால் அரசியை கொடுமைப்படுத்தி அதன் மூலம் பாண்டியனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குமரவேலு முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் எங்கே அடித்தால் பாண்டியன் கஷ்டப்படுவார் என்பதை புரிந்து கொண்டு அரசியை குமரவேலு அடிக்க ஆரம்பித்து விட்டார். இதை பார்த்ததும் பாண்டியன் மனசும் அல்லல்பட ஆரம்பித்து விட்டது.
ஆனால் அரசி, குமரவேலு வீட்டுக்குள் வந்ததும் குழம்பு எடுத்து குமரவேலு முகத்தில் ஊற்றி விடுகிறார். இருந்தாலும் இதில் யாருக்கு என்ன பயன் என்று சொல்வதற்கு ஏற்ப தான் அரசி செயல்கள் இருக்கிறது. தற்போது இதையெல்லாம் தாண்டி அரசியே சாப்பிடுவதற்கு வெளியே கூட்டிட்டு போயிட்டு வாரேன் என குமரவேலு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிட்டு கூட்டிட்டு போகிறார்.
ஆனால் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகாமல் காட்டுக்குள் நடுவில் விட்டு தன்னந்தனியாக தவிக்க விட்டு குமரவேலு நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்து விட்டார். அரசி மீது கொஞ்சம் கூட காதல் இல்லை என்றாலும் பரவாயில்லை பாவம் கூட பார்க்காமல் தனியாக தவிக்க விட்டார். அரசி நடுக்காட்டில் பயந்து கொண்டு எங்கே போவது எப்படி வெளியே போவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.
பிறகு குமரவேலு வீட்டிற்கு தனியாக போகிறார். அப்படி போகும் பொழுது கதிர் செந்தில் இடம் சொல்வது என்னவென்றால் போகும்பொழுது அரசியல் கூட்டிட்டு தான் போனான். ஆனால் திரும்ப வரும்பொழுது அரசியே கூட்டிட்டு வரவில்லை ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் செந்தில் பொறுமையாக இரு என்ன நடக்குது என்று பார்க்கலாம் என வாக்களில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிறகு நேரம் ஆக ஆக அரசி வரவில்லை என்று தெரிந்ததும் கதிர் வீட்டுக்குள் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் அரசி வந்து விடுகிறார். பிறகு வீட்டிற்குள் போன அரசி, இதற்கெல்லாம் சேர்த்து பதிலடி கொடுக்கும் விதமாக குமரவேலுவை ரூம்குள் கூப்பிடுகிறார். ஆனால் என்னதான் அரசி, குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாலும் இதில் பாதிக்கப்பட்டு இருப்பது பாண்டியன் குடும்பமும் அரசியும் தான்.