ஒரே நோக்கத்தோடு தக்லைஃப்பில் விளையாடிய மணிரத்தினம்.. அமீர்கான் வரை ருசி பார்க்க வந்த ஆசை – Cinemapettai

Tamil Cinema News

லப்பர் பந்து, பார்க்கிங், குட் நைட் போன்ற படங்கள் எல்லாம் இங்கே வெற்றி கண்டபோது. மணிரத்தினம், சங்கர் போன்ற மாபெரும் இயக்குனர்கள் ஏன் சில இடங்களில் தங்களை விட்டுக் கொடுத்து விடுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சின்ன தொகுப்பு தான் இது.

50+ இயக்குனர்கள் என்ற பெயரும், படங்கள் இயக்கி கிடைத்த அனுபவமும் தான் இன்று வரை இவர்களை ஒரே குறிக்கோளில் டிராவல் செய்ய வைக்கிறது. ஆனால் புதிதாய் இப்போது வரும் இளம், இயக்குனர்களின் சினிமாவைப் பற்றிய பார்வையே வேறொரு கோணத்தில் இருக்கிறது.

புது இயக்குனர்களின் தாரிக மந்திரமே இந்த படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான். மற்ற எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்கள் இடம் கொடுப்பதில்லை. அவர்கள் தேவையே இந்த படத்தை வைத்து நாம் வளர வேண்டும், அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதுதான் உச்சம்.

ஆனால் மணிரத்தினம், சங்கர் போன்றவர்களின் சிந்தனையே வேறு. நம்மளை நம்பி வரும் தயாரிப்பாளர்களை கைவிடக்கூடாது. இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு எப்படியாவது ஒரு லாபத்தை கொடுத்து விட வேண்டும் என்பதைத்தான் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

மற்றொன்று இவர்கள் யோசிக்கும் அந்த காம்பினேஷன், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி இந்தக் கூட்டணியில் டிராவல் செய்தால் நிச்சயமாக படம் நன்றாக அமைந்து வெற்றி பெற்றுவிடும் என்பது தான். இப்பொழுதும் தக்லைஃப் முதலுக்கு மோசம் செய்யவில்லை.இந்தப் படத்தை 250 கோடிக்கு மேல் பிசினஸ் செய்து விட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சின்ன படமான லப்பர் பந்து கூட பாலிவுட் ஜாம்பவான் அமீர்கானிடம் பெரிய வரவேற்பை பெற்று ரீமேக் செய்யும் அளவிற்கு போய்விட்டது. அந்த பட ஹிந்தி வெர்சனில் அமீர்கான் நடிக்க உள்ளார். இப்படி இருக்கும் பட்சத்தில் மணிரத்தினம், சங்கர் போன்றவர்கள் இன்றைய தலைமுறையுடன் டிராவல் செய்தால் நன்றாக இருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.