அன்புவிடம் ஆர்டர் போடும் துளசி, அடம் பிடிக்கும் ஆனந்தி.. மொத்தத்தையும் சர்வ நாசம் பண்ண போகும் காயத்ரி! – Cinemapettai

Tamil Cinema News

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பது எப்போது யார் மூலமாக தெரியும் என்பது தான் தற்போது நாடகத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு.

ஆனந்தி எதனால் அன்புவை விட்டு விலக நினைக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள துளசி மற்றும் மகேஷ் முயற்சி எடுக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இன்று கம்பெனியில் ஆனந்திக்கு ரத்த மாதிரி, பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

ஆனந்தி இந்த விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்ட பின்னர் கெஞ்சி அழுதது அன்புவுக்கு மனவேதனையாக இருந்தது. அன்பு ஆனந்தியை கஷ்டப்படுத்தாமல் இந்த முடிவை கைவிட்டு விடலாமா என்று நினைக்கிறான்.

சர்வ நாசம் பண்ண போகும் காயத்ரி!

அந்த நேரத்தில் தான் துளசி போன் பண்ணி இன்னைக்கு ஒரு நாள் ஆனந்தி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. அவளுக்கு என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

அதே நேரத்தில் ஆனந்தி தன்னுடைய தோழி காயத்ரிக்கு போன் செய்து நடந்த எல்லாவற்றையும் சொல்கிறாள். ரத்த மாதிரி பரிசோதனைகள் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நேயர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

எப்படியாவது அன்பு மற்றும் மகேசுக்கு ஆனந்தியின் நிலைமை புரிந்தால் தான் அவளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். இதில் உள்ளே நுழைந்து தேவையில்லாத வேலையை செய்யப்போவது காயத்ரி தான்.

ஆனந்தி அழுததும் காயத்ரி அந்த மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி மாற்றுவதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. காயத்ரி இதை துணிந்து செய்கிறாளா அல்லது ஆனந்தியின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.