இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து.. மகளுக்காக வக்காலத்து வாங்கும் கோபி பாக்கியா – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவை நித்தேஷுக்கு சுதாகர் கல்யாணம் பண்ணி வைத்தது பாக்கியா வைத்திருந்த 2 ஹோட்டலை அபகரிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு சும்மா கட்டுக்கதை சொல்லும் விதமாக இனியாவை டிவியில் பார்த்து நித்தேஷ் ஆசைப்பட்டு விட்டான். கல்யாணம் பண்ணினால் இனியாவை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று பிடிவாதமாக இருப்பதாக சுதாகர், கோபியை நம்ப வைத்து விட்டார்.

கோபிக்கும் சுதாகர் வசதி வாய்ப்பை பார்த்ததும் தன் மகள் இங்கே வாக்கப்பட்டு போனால் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் இனியாவை வற்புறுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்து நித்தேஷுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு தான் இனியாவுக்கு தெரிந்தது அம்மாவின் ஹோட்டலை வாங்க வேண்டும் என்பதற்காக தன்னை பகடகாயாக பயன்படுத்தி இருக்கிறார் என்று.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்து ஒரு விஷயத்தில் நித்தேஷ் அவருடைய வக்கிரபுத்தியை காட்ட ஆரம்பித்து விட்டார். பாக்யாவின் ஹோட்டலுக்கு இனியா போன நிலையில் அங்கே வேலை பார்ப்பதற்காக ஆகாஷ் வந்தார். அப்படி ஆகாஷ் வந்த பொழுது இனியா எப்படி இருக்கிறாய் என்று பேசினாள். இதை பார்த்த நித்தேஷ் இவர்கள் இருவரையும் சந்தேகப்படும் அளவிற்கு சைக்கோ தனமாக நடந்து கொண்டார்.

அதோடு நிறுத்தாமல் சுதாகர் மற்றும் அவருடைய மனைவியிடமும் சொல்லி நித்தீஷ் இனியாவை அவமானப்படுத்தி விட்டார். இதையெல்லாம் பார்த்து இனியா மன வருத்தத்தில் கோபி இடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். கோபிக்கு அப்போது தான் தெரிகிறது அவசரப்பட்டு விட்டோம் என்று. உடனே பாக்யாவிடம் இனியா கல்யாண விசயத்தில் நான் தவறான முடிவை எடுத்து விட்டேன் என்று இப்பொழுது பீல் பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.

அத்துடன் பாக்யாவிற்கும் இனிய படும் கஷ்டம் தெரிந்து விட்டது. உடனே இதை தட்டிக் கேட்கும் விதமாக கோபி மற்றும் பாக்யா இருவரும் சேர்ந்து சுதாகர் வீட்டிற்கு போய் பேசுகிறார்கள். அப்படி பேசும் பொழுது நித்தேஷ் நிதானம் இல்லாமல் இனியா மீது தவறு இருப்பது போல் பேசுகிறார். ஆனால் பாக்கியா என் பொண்ணு எந்தத் தவறும் பண்ண மாட்டாள். அவளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் நீங்கள் கொடுத்து ஆக வேண்டும் என்று வாக்குவாதம் பண்ணுகிறார்.

ஆனால் நித்திஷ் மற்றும் சுதாகர் பொறுத்தவரை இதுக்கெல்லாம் அசரக்கூடிய ஆள் இல்லை. அதனால் நிச்சயம் இனியாவை துன்புறுத்த வாய்ப்பு இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பாக்கிய, தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்ட மாதிரி தன் மகளும் கஷ்டப்பட வேண்டாம் என்று முடிவு பண்ணி இனியா விவாகரத்து செய்தால் சரியாக இருக்கும் என்று ஐடியா கொடுக்கப் போகிறார்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலென்றால் எல்லாமே ரெண்டு தான் இருக்கும். கோபிக்கு பாக்கியா ராதிகா, செழியனுக்கு ஜெனி மாலினி, அமிர்தாவுக்கு கணேசன் எழில் இருந்தது போல் தற்போது இனியாவும் நித்தேஷை விட்டுவிட்டு ஆகாஷ் உடன் சேர வாய்ப்பு இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.