எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரனை தோற்கடித்த நந்தினி.. தாரா பங்ஷனுக்கு வரும் அப்பத்தா – Cinemapettai

Tamil Cinema News

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எல்லா விஷயத்திலும் குணசேகரன் ஆனாதிக்க திமிரை காட்ட வேண்டும் என்று பிரச்சனை செய்து வருகிறார். அதே மாதிரி தான் நந்தினியின் மகள் தாரா சடங்கானதிலிருந்து பங்க்ஷன் வைக்கும் வரை எல்லாவற்றிலும் மூக்கு நுழைத்து நந்தினி நினைப்பதற்கு எதிராக காரியத்தை சாதிக்க வேண்டும் என்று அறிவுக்கரசியை வர வைத்தார்.

வந்தது மட்டும் இல்லாமல் அறிவுக்கரசி மற்றும் தம்பி முல்லை வைத்து தான் வர செய்ய வேண்டும் என்று கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அதோடு நிறுத்தாமல் நந்தினியின் தம்பி நெடுஞ்செழியன் முறை செய்ய வரக்கூடாது என்பதற்கு அடியாட்கள் மூலம் நெடுஞ்செழியனை கடத்தி வைத்தார்.

இதனால் குணசேகரன் கதிர் ஆசைப்பட்ட மாதிரி அறிவுக்கரசி முறை செய்ய தயாராகி விட்டார். ஆனால் கடைசி நிமிஷத்தில் நெடுஞ்செழியன் வந்து இவர்கள் முகத்தில் கரிய பூசும் விதமாக நந்தினி ஆசைப்பட்ட மாதிரி தாராவுக்கு மாமன் சடங்கு அனைத்தையும் செய்து விட்டார்.

இதனால் மூக்கு அறுத்து போன அறிவுக்கரசி முல்லை அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். எப்படி நாம் போட்ட கணக்கு மிஸ் ஆச்சு என்று குழப்பத்தில் கதிர் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார். உடனே நந்தினியும் தான் நினைத்தது நடந்து விட்டது என்ற சந்தோசத்தில் மகளுக்கு செய்ய வேண்டிய அடுத்தடுத்து விஷயங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்.

விசாலாட்சி மற்றும் குணசேகரன் இடம் நைசாக பேசி தாராவை வாழ்த்தவும் நந்தினி வைத்துவிட்டார். இதோடு மட்டுமில்லாமல் பிள்ளைகளை கூப்பிட்டு அவங்க ஆசைப்படி ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடுகளையும் பண்ணி வைத்து விட்டார். அந்த வகையில் கதிரிடம் எல்லோரும் சேர்ந்து வெளியே சாப்பிட போகிறோம் என்று சொல்லி சர்ப்ரைஸ் ஆக அந்த பார்ட்டிக்கு நன்றி கூட்டிட்டு வந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு அப்பத்தாவும் வந்து தாராவுக்கு வாழ்த்து சொல்லி பெண்களின் வெற்றியில் கலந்து கொள்கிறார். மேலும் நான்கு மருமகள்களும் ஆட்டம் பாட்டம் என சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் நம்மளை தோற்கடித்து விட்டு நினைத்ததை சாதித்து விட்டார்களே என்ற வருத்தத்தில் குணசேகரனும் இருக்கிறார். கதிரும் வழக்கம்போல் நான் சும்மா விடமாட்டேன் அவர்களை என்ன பண்ணுகிறேன் பாரு என்று ஆவேசமாக பேச ஆரம்பித்து விட்டார்.

அப்பொழுது தான் தெரிகிறது நெடுஞ்செழியனை கடத்தி வைத்தது கதிர் தான் என்று. உடனே சக்தி நீ எதுவுமே பண்ணாமல் இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது சுமூகமாக எல்லாம் நடந்திருக்கும். தேவை இல்லாமல் எல்லாத்தையும் செய்து விட்டு தற்போது வலிக்குதுன்னு சொன்னா என்ன பண்ண முடியும் என கதிருக்கு புரிய வைக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.