கேள்விக்குறியாக நிற்கும் லட்சுமி பிரியாவின் கல்யாண வாழ்க்கை.. கடுப்பாக பதிலளித்த காவேரி – Cinemapettai

Tamil Cinema News

Mahanadhi Kaveri: விஜய் டிவி மூலம் மகாநதி சீரியலில் காவேரி கேரக்டரில் நடித்து வரும் லட்சுமி பிரியா நடிப்பால் மக்களை கவர்ந்திருக்கிறார். இவருடைய நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்த நிலையில் சின்ன திரையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

மகாநதி சீரியலில் நடிப்பதற்கு முன் ரோடு, பத்துக்குள்ள, ட்ரிப், பன்னிக்குட்டி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பெருசாக இவருடைய கதாபாத்திரம் பேசப்படவில்லை. அதனால் சீரியலுக்குள் நுழைந்த லட்சுமி பிரியா முதல் நாடகத்திலேயே அனைவரையும் கவர்ந்து விட்டார். அந்த வகையில் காவேரி மற்றும் விஜய் கதாபாத்திரங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு அதிக அளவில் பிடித்ததால் VIKA என்ற முத்திரையுடன் இவர்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது ஒரு விதத்தில் லட்சுமி பிரியாவுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தாலும், இன்னொரு பக்கம் இதுவே மிகப்பெரிய நெகட்டிவ் ஆகவும் அமைந்து வருகிறது. அதாவது சீரியல் மூலம் ஜோடியாக நடித்து வரும் விஜய் காவேரி நடிப்பை பார்த்து ரசித்த ரசிகர்கள் காவிரி வேறு யாருடன் இருந்தாலும் அதை தவறாக பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் காவிரி சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சபரி என்பவர் உடன் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அப்பொழுது இருவரும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட பொழுது இதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து கமெண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துடன் லட்சுமி பிரியா, விஜய் என்கிற சுவாமி நாதனே தவிர வேறு யாரை கல்யாணம் பண்ணினாலும் நாங்கள் கொந்தளித்து விடுவோம் என்று ரசிகர்கள் சிலர் காவிரிக்கு கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். இதை பார்த்த காவேரி, நான் யாரை கல்யாணம் பண்ணனும் பண்ணக்கூடாது என்று என்னுடைய வாழ்க்கையை முடிவெடுக்கும் பொறுப்பு என்னிடம் மட்டுமே இருக்கிறது.

சீரியல் பார்த்தால் அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை விமர்சனம் செய்ய யாருக்கும் அருகதை இல்லை. சில பேருக்கு எக்ஸ்பிளைன் பண்றதுக்கு பதிலா அந்த நபர் என்னமோ நெனச்சிட்டு போகட்டும்னு விட்ரனும் என்று கடுப்பாக பதில் அளித்திருக்கிறார்.

அந்த வகையில் ஒரு சீரியலை சாதாரணமாக பார்ப்பதை விட்டுவிட்டு இவரை தான் கல்யாணம் பண்ணனும் அவங்களை பண்ணக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஆனால் சில ரசிகர்கள் விஜய்யை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்லி எடக்குமடக்கான கேள்விகளை கேட்டு லட்சுமி பிரியாவின் கல்யாண வாழ்க்கையை கேள்விக்குறியாக நிறுத்துகிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக கோபமாக லட்சுமி பிரியா பதில் அளித்து வருவதால் இவங்களுக்கு தலைக்கனம் கூடிவிட்டது. அதனால் ஓவராக ஆடி வருகிறார் என்று நெகடிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டது.

இது எல்லாத்தையும் தாண்டி லட்சுமி பிரியா, சீரியல் வேற வாழ்க்கை வேற என்ற அர்த்தத்தை நன்றாக புரிந்து அவர்களுடைய வாழ்க்கை நோக்கி பயணம் செய்து வருகிறார். ரசிகர்கள் முடிந்தால் சப்போர்ட் செய்யவும். இல்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள் என்று காவிரியின் உண்மையான ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.