வெற்றிமாறன், சிம்பு கூட்டணியின் பின்னணி.? விட்டுக் கொடுத்த தனுஷ் – Cinemapettai

Tamil Cinema News

Dhanush : சமீபத்தில் இணையத்தில் அதிகம் பேசப்படும் செய்தி வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணி தான். எதிர்பாராமல் அமைந்த இந்தக் கூட்டணி எப்படி அமைந்தது, பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றி சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் கொடுத்து வெற்றி பெற்றார். அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் சிம்புவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கான வேலைகளும் இப்போது தொடங்கி விட்டதாம். ஆனால் இந்த படம் வடசென்னை 2 என்று கூறப்படுகிறது. அதாவது வெற்றிமாறனை தனுஷை நேராக சந்தித்து பேசி இருக்கிறார். அதாவது வடசென்னை 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் நீண்ட வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியின் பின்னணி

ஆனால் நம்மால் மீண்டும் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. இப்போது வட சென்னை 2 படத்தை சிம்புவை வைத்து எடுக்க விருப்பப்படுகிறேன் என்று வெற்றிமாறன் கூறினாராம். அதற்கு தனுசும் சிறப்பாக செய்யுங்கள் என்று விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வடசென்னை படத்தில் அமீர், தனுஷ் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் அந்த கதை களத்திற்கு ஏற்றார் போல் அவர்களின் தோற்றமும், நடிப்பும் இருந்தது. இந்த சூழலில் சிம்பு அந்த கேரக்டருக்கு எப்படி செட் ஆகுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதோடு சமீபத்தில் குபேரா விழாவில் தனுஷ் வடசென்னை 2 படத்தை பற்றி பேசுகிறார். அதாவது விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆகையால் சிம்புவை வைத்து தான் இப்போது வெற்றிமாறன் வடசென்னை 2 பட வேலைகளை தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.