ரெய்டு வந்தவருக்கு பதவி, கேலிக்குள்ளான தளபதி.. பக்கா மாஸ்டர் பிளான் இதுதானா? – Cinemapettai

Tamil Cinema News

TVK Vijay: சோழியான் குடுமி சும்மா ஆடாதுன்னு ஒரு பழமொழி சொல்வார்கள். தமிழக வெற்றி கழகம் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளும் இது போன்றது தான். நேற்று அருண்குமார் IRS என்பவருடன் சேர்த்து திமுக, அதிமுக உறுப்பினர்களும் தவெக கட்சியில் இணைந்தனர்.

இதில் அருண்குமார் கட்சியில் இணைந்து கொஞ்ச நேரத்தில் கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்த விஷயம் தான் தற்போது பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

மாஸ்டர் பிளான் இதுதானா?

இதற்கு காரணம் இந்த அருண்குமார் இதற்கு முன்பு தமிழக வருமான வரித்துறையின் தலைமையாளராக பணியாற்றினார். அந்த சமயத்தில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு இவர் நடத்தியது தான்.

அப்படி இருக்கும் போது எதற்காக இந்த பதவி என்பது தான் கேள்வி. சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் உட்பட பலரும் விஜய் பிஜேபி கட்சியிடம் சரண்டர் ஆகிவிட்டதாக தான் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் தங்களுக்கு தெரிவிக்க பிஜேபி கட்சியால் அனுப்பப்பட்டவர் தான் இந்த அருண்குமார் என்று பேச்சு ஓடி கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே மத்தியில் ஆளும் கட்சி கவனிக்கும் அளவுக்கு விஜய் வளர்ந்து இருக்கிறார் என்பது பெரிய விஷயம் தான்.

இதை தாண்டி விஜய்யை உளவு பார்க்க இவர் வந்திருக்கிறார் என்று சாமானிய மக்களே யோசிக்கும் போது முதலமைச்சர் வேட்பாளருக்கு தயாராகி கொண்டிருக்கும் விஜய் யோசிக்காமல் இருந்து இருப்பாரா.

எது எப்படியோ பிஜேபிக்கு ஆதரவாக யார் களம் இறங்கினாலும் மக்களிடம் எடுபட மாட்டார்கள் என்பது தான் தற்போதைய தமிழகத்தின் நிலைமை. இதெல்லாம் விஜய் யோசிக்காமல் கூட்டணி பற்றி முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.