இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் எதில் தெரியுமா.? – Cinemapettai

Tamil Cinema News

June 2nd week OTT Release movies : கடந்த வாரம் தியேட்டரில் தக் லைஃப் மற்றும் மெட்ராஸ் மேட்னி ஆகிய படங்கள் வெளியானது. தக் லைஃப் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. ஆனால் மெட்ராஸ் மேட்னி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில் வருகின்ற ஜூன் 13 தியேட்டரில் படைத்தலைவன் படம் வெளியாக இருக்கிறது. இப்போது ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம். ஜூன் 13ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அடுத்ததாக மலையாளத்தில் உருவான சூப்பர் கேர்ள்ஸ் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் தமிழில் உருவான லெவன் படம் டென்ட் கொட்டா, ஆஹா தமிழ், சிம்பிளி சவுத் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

ஜூன் இரண்டாவதாக ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள்

தெலுங்கில் உருவான சுபம் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. மலையாளத்தில் ஆழப்புழா ஜிம்முக்கானா படம் சோனி லைவ் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ராணா நடிப்பில் உருவாகி இருக்கும் ராணா நாயுடு படம் நெட்பிளிக்சில் வெளியாகிறது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் Under Dog, Then No One Sees Us, Snow White, Padakkalam ஆகிய படங்கள் வெளியாகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் The Rookie, Cells At Work, Too Hot To Handle, Business Proposal, Cheers To Life, Our Time மற்றும் Titan ஆகிய படங்கள் வெளியாகிறது.

தக் லைஃப் படம் தான் இந்த வாரம் ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. ஆகையால் இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைய இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.