சன் டிவியில் 6 சீரியல் இணையும் மகா சங்கமம்.. எதிர்நீச்சல் சீரியலுடன் சேரப்போகும் 2 கதாநாயகன்கள் – Cinemapettai

Tamil Cinema News

Sun Tv: விஜய் டிவி சீரியலில் தான் மகா சங்கமம் என்ற விஷயம் உருவாக்கப்பட்டது. அதுவும் நல்லா போகிற ஒரு சீரியலும் மொக்கையாக போகிற ஒரு சீரியலையும் ஒன்றிணைத்து இரண்டு வாரங்கள் ஓட்டுவது தான் மகா சங்கமம். இப்படி கொண்டுவரும் நேரத்தில் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல மாற்றம் உண்டாகும்.

இந்த விஷயத்தை விஜய் டிவி தொடர்ந்து செய்து வந்தாலும் தற்போது கொஞ்ச நாட்கள் மகா சங்கமத்திற்கு பிரேக் கொடுத்திருந்தார்கள். ஆனால் இந்த கேப்பில் சன் டிவி சேனல் மகா சங்கமத்தை கொண்டு வருகிறது. அதுவும் ஒரு சீரியல் இரண்டு சீரியல் அல்ல ஆறு சீரியல்களை மகா சங்கமமாக கொண்டு வரப் போகிறது.

அந்த வகையில் பிரைம் டைம் சீரியலை குறி வைத்திருக்கிறது. இந்த சீரியல்கள் மூலமாக தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற முடியும் என்பதால் சன் டிவி இந்த மாதிரி அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அதாவது கயல் மற்றும் அன்னம் சீரியல் ஒன்றாக இணைகிறது.

அடுத்ததாக மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் ஆக வரப்போகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் 2 மற்றும் இரண்டு கதாநாயகங்களை கொண்டு மக்களின் பேவரைட் சீரியலாக இருக்கும் சிங்க பெண்ணே சீரியலும் ஒன்றினைக்கிறது.

இப்படி ஆறு சீரியலும் ஒன்றாக இணைந்து மூன்று சங்ககமாக உருவாகப் போகிறது. இந்த அதிரடி செயல்களால் நிச்சயம் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்க்காத படி அதிக புள்ளிகளை பெற வாய்ப்பு இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.