இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 படங்கள்.. மேடியுடன் மோதும்  விஜய் சேதுபதி – Cinemapettai

Tamil Cinema News

கடந்த சில வாரங்களில் ஏதாவது ஒரு படம் ஓடிடி-யில் பார்த்து ரசிக்கலாம் போல இருந்தது. ஆனால் இந்த வாரம் மட்டும் 5 படங்கள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்டில் உள்ளது. அதிலும் 5வது இடத்தில் விஜய் சேதுபதியின் Ace படம் உள்ளது.

ஒரு வாட்டி இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என்பது போன்ற விமர்சனங்கள் வந்துள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு கலக்கியுள்ளார். தியேட்டரில் மிஸ் பண்ணவங்க Amazon Prime ஓடிடி-யில் கண்டிப்பாக பார்க்கலாம்.

நான்காவது இடத்தில் லெவன் படம் இடம் பிடித்துள்ளது. முதல் பாதி மெல்ல மெல்ல நகர்ந்தாலும் 2ம் பாதியில் மிரட்டி விட்டனர். பிளாஷ்பேக், எதிர்பாராத Twist மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக அற்புதமாக ஸ்கிரீன் ப்ளே அமைந்துள்ளது.

இரட்டை குழந்தைகளை பார்த்து கொலை செய்யும் ஒரு கில்லர், யார் அந்த கில்லர்? என்பதை கண்டுபிடிப்பது தான் கதை. கடைசி வர செம திரில்லிங்காக இருக்கும் Amazon Prime ஓடிடி-யில் மிஸ் பண்ணிடாதீங்க!

மூன்றாவது இடத்தில் Kesari Chapter 2 இடம் பிடித்துள்ளது. இது ஒரு பவர்ஃபுல் Court Drama story. அக்ஷய்குமார், அனன்யா பாண்டே, மாதவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு உண்மை கதை என்றும் கூறப்படுகிறது, JioHotstar ஓடிடி-யில் மிஸ் பண்ணிடாதீங்க!

இரண்டாம் இடத்தில் ஆலப்புழா ஜிம்கானா (SonyLIV) என்ற மலையாள படம் இடம் பிடித்துள்ளது. நம்ம தமிழ் சினிமாவில் சார்பட்டா பரம்பரை, இறுதி சுற்று போன்ற குத்து சண்டை சாயலில் கதை இருக்கும்.

ஆனால் இந்த இரண்டு படங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு படத்தின் காட்சிகள், ஸ்கிரீன் ப்ளே மற்றும் Stunt மிக அற்புதமாக வந்துள்ளது. Anagha Ravi, Naslen K. Gafoor, Noila Francy, Sandeep Pradeep போன்ற இளம் இளம் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த நான்கு படத்தை விட முதலிடத்தில் Padakkalam (JioHotstar) என்ற மலையாள படம் உள்ளது. இது ஒரு Fun Fantasy Entertainer movie என விமர்சனங்கள் வந்துள்ளது. இதில் சந்திப் ஷரப், நிரஞ்சனா அனுப்பு, சுராஜ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த அனைத்து படங்களுமே இந்த வார ஓடிடி-யில் மிஸ் பண்ணாம பாத்து கொண்டாடுங்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.