பாகுபலி நினைவூட்டிய கண்ணப்பா ட்ரெய்லர்.. பிரபாஸின் ருத்ர தாண்டவம் – Cinemapettai

Tamil Cinema News

Prabhas : முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கிறது கண்ணப்பா. இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பனாகவும், பிரபாஸ் ருத்ராவாகவும், அக்ஷய் குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதியாகவும் மற்றும் மோகன்லால் கிராதாவாகவும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அதுவும் இந்த படம் பாகுபலி பாணியில் உருவாகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

அதாவது படத்தின் கதைய அம்சம் என்னவென்றால் கண்ணப்பா வேட்டைக்காரனாக இருந்த நிலையில் எவ்வாறு சிவபக்தனாக மாறுகிறான் என்பதை புராண பின்னணியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவன், சிவன் மீது எப்படி பக்தி கொள்கிறான் என்பதை உணர்ச்சி பூர்வமாக கூறும் கதை தான்.

கண்ணப்பா படத்தின் டிரைலர் விமர்சனம்

இந்தப் படத்தின் காட்சிகள் நியூசிலாந்தில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. பிரபாஸின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதோடு மோகன்லால் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோரின் கேமியா தோற்றம் படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது.

பக்தி காட்சிகளுக்கு பொருத்தமாக பிஜிஎம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான டீசரை விட ட்ரெய்லர் தரம் உயர்ந்திருப்பதால் ரசிகர்களுக்கு படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் குறை என்னவென்றால் ட்ரைலரில் மொத்த கதையையும் வெளிப்படுத்தியதால் படத்தில் பெரிய ஆச்சரியப்படும் அளவுக்கு எதுவும் இருக்குமா என்பது சந்தேகம் தான். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வி எப் எக்ஸ் காட்சிகள் தொலைக்காட்சி தொடர் போல தான் இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.