Rajinikanth : பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வைத்து படம் பண்ணுவதற்காகவே இயக்குனர்கள் வரிசை கட்டி தான் நிற்கிறார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். வயதானாலும் ஸ்டைலும் அழகும் குறையவில்லை என்ற சொல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கே பொருத்தமானது.
பொதுவாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அனைத்துமே மாசாகவும், கெத்தாகவும், மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் அறிமுக பாடல் பெரும்பாலும் பெரும் ஹிட்டடித்த பாடலாகவே இன்று வரையில் இருந்து வருகிறது.
பொதுவாக மக்களிடையே சூப்பர் ஸ்டாரின் படம் என்றாலே கதை பெரிதாக எதிர்பார்க்கப்படுவதில்லை. சூப்பர் ஸ்டாருக்காகவே படம் பார்க்க செல்லும் மக்களும் இருந்து தான் வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கூலி பட அப்டேட், சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு மேலும் அவரை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச் சென்று உட்கார வைத்திருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் அவர்களுடன் விஜய் மற்றும் அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் சேர்ந்து பணியாற்ற போவதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
யார் அடுத்த பட இயக்குனர்?
இயக்குனர் ஹெச் வினோத் தற்போது ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக பேசப்படுகிறது.
இந்த இயக்குனர் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் முதல் படத்தையே நேர்த்தியாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார்.இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதற்கடுத்து அஜித்தை வைத்து “நேர்கொண்ட பார்வை” படத்தை இயக்கினார் இதற்கு அடுத்ததாக மறுபடியும் அஜித்தை வைத்து “வலிமை” படத்தை இயக்கினார். பிறகு திரும்பவும், அஜித்தை வைத்து “துணிவு” படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் ஹிட்டானது.
இவ்வாறாக விஜய்யின் கடைசி படமான ஜனநாயகம் படத்தை இப்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கிறார் .பெரும்பாலான ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வினோத் அவர்கள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கிறார்.
அந்த சந்திப்பில் ஒரு கதையின் மையக் கருத்தை ரஜினிகாந்த் அவர்களிடம் கூறியிருப்பதாகவும். பிறகு முழு கதையை கேட்டு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.