குபேரா படத்தை கட்டம் கட்டும் PR போஸ்ட்ஸ்.. மொத்த கர்மாவும் தனுசுக்கு எதிரா திரும்புது போலயே! – Cinemapettai

Tamil Cinema News

Kubera: அவன் பொருளை எடுத்து அவனையே செய்வது என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது தனுஷுக்கு நடந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக தனுஷ் மீது பெரிய அளவுக்கு நெகட்டிவிடி என்று எதுவுமே கிடையாது.

உண்மையை சொல்ல போனால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சரியாக குபேரா ஆடியோ வெளியீட்டு விழா நடந்ததுமே தனுஷை சுற்றி ஒரு பெரிய நெகட்டிவ் வேலை செய்து கொண்டிருக்கிறது.

கட்டம் கட்டும் PR போஸ்ட்ஸ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி ரேஞ்சுக்கு பேசியதால் கிண்டல் செய்கிறார் என்று தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் அப்படியே ட்விட்டர் பக்கம் போனால் கதையே வேறு. மொத்த நெகட்டிவிட்டியும் கட்டம் கட்டி இருப்பது குபேரா படத்தை.

முழுக்க தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்தது போல் இருப்பதால் தமிழ் ஆடியன்ஸுக்கு பிடிக்காது. ஆன்லைன் புக்கிங் அந்த அளவுக்கு போகவில்லை. குபேரா படம் கண்டிப்பாக தோல்வி அடைந்து விடும் என கடந்த இரண்டு நாட்களாக எல்லா போஸ்ட்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

என்ன நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் அத்தனையுமே PR போஸ்டுகளாகத்தான் இருக்கிறது. காரணம் இதே மாதிரியே PR போஸ்ட்களை வைத்து தான் நயன்தாராவின் அறிக்கையை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் தனுஷ். அதைத்தான் இப்போது வேறு ஒருவர் தனுஷுக்கு எதிராக கையாண்டு கொண்டிருக்கிறார் என பேசப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.