கூலி டென்ஷனில் லோகேஷ்.. பிரபலங்களின் வார்த்தையில் வீசும் தீ! – Cinemapettai

Tamil Cinema News

Lokesh Kanagaraj : லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமன்றி ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகபடுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க பொதுவாகவே சமீபகாலமாக பிரம்மாண்ட பிரமோஷன் செய்து வெளியாகும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. கங்குவா, தக் லைஃப் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக இருக்கிறது. அதுவும் ரஜினி, லோகேஷ் இணைந்து இருப்பது மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இந்த சூழலில் பிரபலங்கள் இந்த படத்தைப் பற்றி ஹைப்பை ஏற்றி விடுவதால் டென்ஷனில் இருக்கிறாராம் லோகேஷ். அதாவது குபேரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நாகர்ஜுனா கலந்து கொண்டு வருகின்றார். அதில் முக்கால்வாசி கூலி படத்தை பற்றி தான் பேசி உள்ளார்.

கூலி பட பிரபலங்களால் டென்ஷனில் லோகேஷ்

அதேபோல் அமீர்கானின் படமும் வெளியாக உள்ளதால் அவரும் கூலி படத்தை பற்றிய நிறைய சஸ்பென்ஸ்களை உடைத்து வருகிறார். இந்த நடிகர்கள் எல்லாம் பெரிய நட்சத்திரங்கள் என்பதால் லோகேஷால் எதுவும் பேச முடியாமல் உள்ளது.

இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. கடைசியில் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றால் அது லோகேஷுக்கு எதிர்வினையாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே லியோ படம் இதேபோன்று தான் எதிர்பார்த்து ஏமாற்றத்தை கொடுத்தது.

அதை மாற்றுவதற்காக கூலி படத்தில் மிகவும் பயங்கரமாக லோகேஷ் வேலை பார்த்து இருக்கிறார். ஏற்கனவே நாகர்ஜூன் நடித்த காட்சிகள் இணையத்தில் வெளியானதால் மிகுந்த அப்செட்டில் இருந்தார். இப்போது அதே பிரபலங்கள் ஊடகங்களில் பேட்டி கொடுப்பது மேலும் அவருக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.