“குக் வித் கோமாளி”யில் கதறி அழுத ஷபானா. அப்படி என்ன செய்தார் ஆர்யன்… – Cinemapettai

Tamil Cinema News

Shabana : ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் ஷபானா. தமிழில் ஷபானாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” ஷோவில் கலந்துகொண்டு பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.

பொதுவாக “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று பிரபலமானவர்களும் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் “குக் வித் கோமாளி சீசன் 6” -ல் , நிறைய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வர எபிசோடில் குடும்பங்களை அழைத்து அனைவரையும் ஆனந்த கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது குக் வித் கோமாளி குழு.

ஷபானாவை சின்னத்திரை திரையுலகு பார்வதியாக செம்பருத்தி சீரியலில் வைத்து அழகு பார்த்தது. அவரது அழகான முகத்தோற்றமும், பணிவான குணமும் அவரை அதே இடத்தில் தக்க வைத்தது. அப்போது ஷபானா ஆர்யன் என்பவரை காதலித்து வீட்டை எதிரித்து திருமணம் செய்து கொண்டார். இது ரசிகர்களுக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் அவர் எளிமையாக திருமணத்தை செய்துகொண்டார். மற்ற நடிகர்களை போல் திருமணம் ஆனவுடன் எந்த விதமான அலப்பறைகளும் இவர்கள் செய்யவில்லை. ஒருசில நிகழ்ச்சி மேடைகளில் மட்டுமே இவர்களை பார்க்க முடிந்தது. இவ்வாறு சாதாரனமாக அவர்களது வாழ்க்கையை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

கதறி அழுத ஷபானா…

தற்போது ” குக் வித் கோமாளி ” குடும்ப நபர்களை திடிரென்று அழைத்து கண்டெஸ்டண்ட் – களை நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இதில் ஷபானாவின் கணவன் ஆர்யன் பங்குகொண்டு. ஷபானாவை போல் ஒரு மனைவி எனக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் பாக்கியம் செய்துருக்க வேண்டும் என்றும், இன்று வரையில் ஷபானாதான் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார் என உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

அது மட்டுமில்லமல் என்னுடைய அதிர்ஷடம் ஷபானா தான். எனக்கு உண்மையான அங்கீகாரம் கிடைத்ததே இவரை திருமணம் செய்ததற்கு அப்புறம் தான் என வெளிப்படையா பேசியுள்ளார். ஆண் என்ற கர்வம் இல்லாமல் அத்தனையும் நீதான் என அழகாக தன காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யன். இதைக்கண்ட ஷபானா கண்களில் நெகிழ்ந்துபோய் ஆனந்தகண்ணீர் , அதை துடைக்க ஆர்யன் கைகள் என பார்ப்பதற்கே அழகாக உள்ளது. இந்த வார எபிசோடுகளில் பார்த்து மகிழுங்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.