Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அக்காவின் திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய் விடுகிறேன் என யாழினி இடம் ஆனந்தி கூறுகிறாள்.
உண்மையில் ஆனந்திக்கு செவரக்கோட்டையில் தான் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்பது தெரியவில்லை.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அவள் கண்டுபிடிப்பாளா, அதன்பின்னர் அவளுடன் கைகோர்க்கப் போவது அன்புவா அல்லது மகேசா என்று நேயர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கலைக்கப்படும் ஆனந்தியின் கரு
ஆனால் இரண்டுமே இல்லாமல் தற்போது காயத்ரி மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து ஆனந்தியின் கர்ப்பத்தை கலைக்க முடிவெடுத்து இருக்கிறார்கள். குழந்தைக்கு யார் காரணமே என்று தெரியாத நிலையில், அன்புவை அவள் இழந்து விடக்கூடாது என்பதால் இப்படி செய்கிறார்கள்.
ஆனால் அங்கு தான் ஆனந்தி மிகப்பெரிய ட்விஸ்ட் வைக்கப் போகிறாள். தன்னுடைய தோழிகள் தனக்கு இப்படி ஒரு விஷயத்தை செய்யப் போவதை தெரிந்து கொண்டு அங்கிருந்து ஆனந்தி போய் விடுவாள்.
மேலும் அக்காவின் திருமணத்திற்காக அவளுடைய சொந்த ஊருக்கு செல்வது போல் இனிவரும் எபிசோடுகள் இருக்கும். இன்னொரு பக்கம் அன்பு மற்றும் துளசிக்கு திருமண ஏற்பாடு நடப்பது போல் காட்சிகள் வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
கோகிலாவின் திருமணத்திற்காக சொந்த ஊர் செல்லும் போது தான் ஆனந்தி மிகப்பெரிய அவமானத்தை சந்திக்க இருக்கிறாள். இதில் நடந்து கொண்டு இருக்கும்போதே ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளா, அவளுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று உண்மை அவளை தேடி வர வாய்ப்பிருக்கிறது.
கோகிலா திருமணம் வரை ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. கோகிலாவின் திருமணத்தை நோக்கிய எபிசோடுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.