அடுத்த விஜய் இவர்தான்.. வரிசையான திரைப்பட வாய்ப்புகள் – Cinemapettai

Tamil Cinema News

Kavin : தனது கடின உழைப்பால் பல திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின்.

2019-இல் “நட்புன்னா என்னான்னு தெரியுமா” என்ற நகைச்சுவை படத்தில் ரம்யா நம்பீஷனுடன் ஜோடி போட்டு தனது முதல் படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

இதையடுத்து அதே ஆண்டு 2019-இல் பிக்பாஸ் சீசன்-3-இல் பங்கேற்று நிறைய ரசிகர்களை பெற்றார். கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது.

2021 லிஃப்ட் என்ற படத்தில் நடித்த கவினுக்கு படம் வெற்றியை கொடுத்தது. இதையடுத்து 2023ல் வெளியான டாடா திரைப்படமும் கவினுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெற்றியை கொடுத்தது. இப்படத்தின் மூலம் கவின், ரசிகர்களின் மனதில் மேலும் ஆழமாக பதிந்தார்.

அடுத்த விஜய் இவர்தான்..

சினிமாவில் விஜய்க்கு எப்படி இடைவிடாமல் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்குமோ அதே போல தான் இப்போது கவினுக்கு லக் அடித்திருக்கிறது.

தொடர்ச்சியான பட வாய்ப்பு..

கவின் நடிப்பில் கிஸ் என்ற திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.

ஊர் குருவி:

ஊர் குருதி என்ற புதுவிதமான கதையில் நடித்து முடித்த கவினின் திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. வித்தியாசமான கதை என்பதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்க் :

விகர்ணன் அசோக் எழுதி இலக்கிய மாஸ்க் என்ற திரைப்படம் காமெடி நிறைந்த திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கவின் உடன் சேர்ந்து நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.