மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா போன்ற பல பிரபலங்கள் நடித்து வெளிவந்த Thuglife எதிர்பார்த்த வெற்றியும் பெறவில்லை, வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இதனால் மணிரத்தினம் மற்றும் கமல் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதாவது குறைந்த பட்ஜெட்டில் அதிகம் லாபம் தரும் படத்தை தனித்தனியாக எடுத்து சக்சஸ் செய்து காண்பிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மணிரத்தினம் Thuglife படம் ஃபிளாப் என்பதை சமிபத்தில் ஒப்புக்கொண்டு உள்ளார்.
மீண்டும் நீங்களும் கமலும் இணைந்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு We are Sorry என்று ஒரே போடாக போட்டு விட்டார். இதுதான் பெரிய மனுச தனம் தொழிலுக்கும், தயாரிப்பாளருக்கும் உண்மையாக இருக்கும் மணிரத்தினம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஆனால் மற்றொருபுறம் ஷங்கர் அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்தார். முக்கியமாக கேம் சேஞ்சர் படத்தில் தயாரிப்பாளரை குழி தோண்டி புதைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தில்ராஜுக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டம்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தில்ராஜு கூறுகையில் என் சினிமா வாழ்க்கையில நான் செஞ்ச மிகப்பெரிய தவறு சங்கர் போன்ற பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றும்போது ஒப்பந்தத்தில் எனது கருத்துக்களை தெளிவாக பதிவிட்டு தயாரிப்பில் இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அது செய்யவில்லை அதுவே கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர் தில்ராஜு. அதேபோல பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படமும் மரண அடி வாங்கியது.
இப்படி அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து மீள முடியாத நிலையில் உள்ளார் ஷங்கர் மற்றும் அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களும். ஆனால் எப்படியாவது மார்க்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்தியன்-3 படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தை பார்த்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு உள்ளனர். ஆனால் ஷங்கர் இதுவரை தான் இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொள்ளவே இல்லை. இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் மணிரத்தினத்திடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் இணையதளவாசிகள்.