தனுஷ் இன்று புகழின் உச்சிக்கு சென்று கொண்டாடப்பட்டாலும் . அவர் தமிழ் திரையுலகில் நடிப்பு என்று நுழைந்த காலகட்டத்தில் அவரை உருவக் கேலியும், நடிப்பு வரவில்லை என்றும், அவர் பேசுவதை வைத்தும் அனைவரும் பண்ணாத கேலிகளை இல்லை. ஆனால் இன்றோ இவரால் மட்டும் தான் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என்ற நிலைக்கு பேச வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.
இது அவ்வளவு சாத்தியமான விஷயம் கிடையாது. அந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறார் என்றால் நடிகர் தனுஷ் அவர்கள் எந்த அளவுக்கு அவரது உழைப்பை, அவரது நேரத்தை , அவரை மேம்படுத்துவதற்காக ஒதுக்கி இருப்பார். கஷ்டப்படாமல் யாரும் எளிதில் உச்சியை சென்றடைய முடியாது என்பதற்கு நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
இந்த பத்து ஆண்டுகளில் தனுஷ் அவர்களை படிப்படியாக உயர்த்திக் கொண்டு வந்த படங்களை பார்க்கலாம். அவர் பொதுவாக ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததே கிடையாது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, வித்தியாசமான அணுகுமுறை, வித்தியாசமான நடிப்பு இதுதான் இவரை இந்த அளவுக்கு உயர்த்தி வைத்துள்ளது என்று கூறலாம்.
2016 ஆம் ஆண்டு வெளிவந்த கொடி படம் முற்றிலும் ஒரு அரசியல்வாதியாக வேறு ஒரு கோணத்தில் பிரதிபலித்தார் தனுஷ். அதைத்தொடர்ந்து வெளிவந்த தொடரி படத்தில் ரயில் பயணத்தில் நம் மனதை வருடியிருப்பார்.
2017 –இல் பவர் பாண்டி படத்தில் நடித்திருப்பார்.
2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படம் தனுஷின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த படத்தில் எளிமையான நடிப்பில் மிரட்டி இருப்பார் தனுஷ். அதே சமயத்தில் மாரி-2 படமும் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது.
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் சொல்ல வார்த்தைகளே இல்லை. அதிலும் எதார்த்தமான நடிப்பில் மிரள வைத்திருப்பார் நடிகர் தனுஷ்.
2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படம் அதில் இரண்டு கதாபாத்திரம் செய்து நன்றாக நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்திருப்பார் தனுஷ்.
2021 ஆம் ஆண்டு வரிசையாக அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் தான் கர்ணன், ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே இந்த மூன்று படங்களிலுமே தனுஷின் நடிப்பை அடித்துக் கொள்ள முடியாது. கர்ணன் படம் தனுஷை பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் பேசவைத்தது.
2022 ஆம் ஆண்டு வெளிவந்த திருச்சி திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் படம் இரண்டுமே வித்தியாசமான படங்கள் திருச்சிற்றம்பலம் படம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படம் மற்றும் ரசிக்க வைத்த ஒரு படம்.
2023 ஆம் ஆண்டு வெளிவந்து இதுவரை எத்தனையோ கதாபாத்திரங்கள் தனுஷ் நடித்திருந்தாலும் அவர் நடித்த வாத்தி படம் அவரை நல்ல வாத்தியாராகவே நமக்கு கொடுத்துள்ளது.
2024-ல் வெளிவந்த கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்கள் தனுஷை மேலும் மேலும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி
இதற்கு அடுத்து 2025 இல் வெளிவந்திருக்கும் குபேரா சொல்ல வார்த்தைகளே இல்லை. இவ்வளவு கடினமான பாதைகளை தனுஷ் அவர்கள் கடந்து வந்திருந்தாலும், அவர் பட்ட கஷ்டங்கள், அவர் உழைத்த உழைப்புகள் அனைத்தும் பெற்று தந்தவையை குபேரா படத்தின் வெற்றி.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அணு அணுவாக ரசித்து அதை அப்படியே நம் மனதில் ஏற்றுக் கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கே மேலும் மெருகேற்றி நடித்துக் கொடுத்திருப்பார் தனுஷ் பொதுவாக தனுஷ் அவர்களுக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அது கச்சிதமாக பொருந்தி தான் போகிறது என்றேதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக தனுசுக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.