Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சவ்வாய் இழுத்துக் கொண்டு இருந்த இந்த சீரியலின் எபிசோடு இந்த வாரத்தில் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஹாஸ்டலில் யார் கர்ப்பமாக இருக்கிறார் என்ற சந்தேகத்துடன் இருந்த வார்டனுக்கு ஆனந்தி பதில் சொல்லிவிட்டாள். ஆனந்திக்கு தெரியாமலேயே இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதால் வார்டனுக்கு அவள் மீது பரிதாபம் தான் வருகிறது.
வார்டனிடம் லாக் ஆகும் மகேஷ்
இந்த விஷயத்தில் எப்படியாவது ஆனந்திக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார். ஆனந்திக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக மகேஷ் வந்து நிப்பான் என்பது வார்டனுக்கு தெரியும். இதனால் இந்த விஷயத்திற்கும் மகேஷ் மூலம் உதவி கேட்பது என வார்டன் முடிவெடுக்கிறார்.
ஆனந்தி கர்ப்பத்திற்கு தான் தான் காரணம் என்பதை மகேஷ் அவனாகவே கண்டுபிடிப்பது போலத்தான் இந்த கதை நகர இருக்கிறது. அதே நேரத்தில் வார்டன் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து லலிதாவை சமாதானப்படுத்த செல்கிறார்கள்.
அன்பு அடிபட்டிருக்கும் நேரத்தில் கூட ஆனந்தி அவனை எட்டிப் பார்க்கவில்லை என்பதில் லலிதாவின் மிகப்பெரிய கோபம். மகேஷ் வந்து பேசும்போது கூட லலிதா அதையே தான் சொல்கிறார். இதனால் பொறுமை இழந்த துளசி ஆனந்தி அன்புவை வந்து பார்த்ததை சொல்லி விடுகிறாள்.
இவ்வளவு பாசம் இருக்கும் பொழுது ஆனந்தி எதனால் அன்புவை வெறுக்கிறாள் என்று லலிதா மற்றும் அன்புவுக்கு சந்தேகம் வருகிறது. எப்படி பார்த்தாலும் ஹாஸ்டல் வார்டன் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து அன்புவிடம் உண்மையை சொல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது.