மீண்டும் இசைஅமைப்பாளராக போய்விடலாமா என முடிவெடுத்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு, இன்று அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் மார்கன் கைகொடுத்ததா இல்லையா என்பதை பற்றி ஒரு தொகுப்பு. இந்த படத்தை லியோ ஜான்பால் இயக்க விஜய் ஆண்டனி தான் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இன்று முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். எப்பொழுதுமே நெகட்டிவ் டைட்டிலுக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனி இந்த படத்தில் சற்று வித்தியாசமான டைட்டிலை கையாண்டு இருக்கிறார். மார்கன் படம் மீண்டும் ஒரு திரில்லர் கதையாக இன்று ஆயிரம் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது
விஜய் ஆண்டனியுடன் இந்த படத்தில் பிரிகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி, அஜய் திஷான் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இதில் அஜய் திஷான் முதல் படம் போல் இல்லாமல் அனுபவசாலியாக தன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். விஜய் ஆண்டனி கேரியரில் அதிக திரையரங்குகள் இந்த படத்திற்கு தான் கிடைத்துள்ளது.
முதல் ஷோ படத்தை பார்த்த விமர்சனர்களின் கருத்து இதோ, படம் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. விஜய் ஆண்டனி வெட்டி ஹீரோயின் செய்யாமல் கதைக்கு தகுந்தவற்றை மற்றும் செய்து கைதட்டளை பெறுகிறார். அஜய் திஷான் அறிமுகப்படத்திலேயே நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி சற்று டல் தானம். படத்திற்கு பின்னணி இசையும், உலகையே மறக்கிறேன் பாடலும் அம்சம். மற்றபடி வழக்கமான ஒரு திரில்லர் கதை அனுபவம் தான், வேறு ஒன்றும் புதிதாக இல்லை. திரில்லர் கதைகளை விரும்புவோர் இதை தைரியமாக பார்க்கலாம்.