Cinema : தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகருக்கும் படத்தின் அடிப்படையில் போட்டி இருந்துகொண்டேதான் இருக்கும். அதிக வசூல் பெற்ற படம். அதிக நாட்கள் ஓடிய படங்கள் என பல்வேறு காரணங்களை முன்வைத்து எப்போது போட்டி போட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்.
இவர்களுடன் போட்டி போடுவது மட்டுமல்லாமல் புது புது நடிகர்களுடனும் இவர்கள் போட்டி போடவேண்டிய சூழ்நிலையில் உள்ளது இப்போதுள்ள தமிழ் சினிமா. நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர்களுக்கிடையில் போட்டி இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதுஎல்லாமே வெளிவந்த படத்திற்கு பொருந்தும்.
தற்போது வெளிவந்த படத்திற்கு மட்டுமில்லாமல், வெளிவருவதற்கு முன்பே ஓவர்சீஸ் பிஸ்னெஸ்ஸை எதிர்நோக்கி தனது மார்கெட்டை தொடங்கி விடுகின்றனர் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் படக்குழு. அந்த வகையில் திரைக்கு வருவதற்கு முன்பே அதிக ஓவர்சீஸ் பிசினெஸ்ஸை அள்ளி தந்த படங்களின் மூன்று வரிசையை பார்க்கலாம்.
ஜனநாயகன் : நடிகர் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகம் படத்தின் அப்டேட் தற்போது வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் “1ஸ்ட் ரோர்” வெளிவந்து ரசிகர்களின் கொண்டாட வைத்தது. அதுமட்டுமல்லாமல் வெளிவருவதற்கு முன்பே 59 கோடி ஓவர்சீஸ் பிசினெஸ்ஸை பெற்று தந்துள்ளது.
2.0 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 2.0 படம் ரிலீசாவதற்கு முன்பே மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றது. இது முற்றிலும் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். ஷங்கர் இந்த படத்தை இயக்கி இருப்பார். இந்த படத்தில் எமிஜாக்சன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இந்த படமும் திரைக்கு வருவதற்கு முன்பே 60 கோடி ஓவர்சீஸ் பிசினெஸ்ஸை பெற்றுத்தந்துள்ளது.
கூலி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் கூலி படம் தற்போது சோசியல் வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் இதன் உரிமையை பெறுவதற்காகவே பெரும்புள்ளிகள் இடையே போட்டிகள் நிலவுகின்றன. இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த நாளிலிருந்து எங்கு பார்த்தாலும் இதன் அப்டேட் தான் கண்ணில்படுகிறது. அவ்வகையில் தற்போது கூலி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே 90 கோடி ஓவர்ஸ்ஸீஸ் பிசினெஸ்ஸை பெற்றுத்தந்துள்ளது.
ரஜினியை தொட முடியாத விஜய்
இதனால் ரஜினிகாந்த் அவர்கள் தனது 2 படங்களின் மிகப்பெரிய ஓவர்சீஸ் பிசினஸ் செய்து நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் படத்தை பின்தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் ஓவர்ஸ்ஸீஸ் பிசினஸில் ரஜினிகாந்த் அவர்கள் முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.