Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனாலும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாப்புலராக இருந்தாலே இதான் ஒரு ப்ராப்ளம் என அவர் இதை அசால்டாக டீல் செய்கிறார்.
அதில் தற்போது அவர் அப்செட் ஆகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மதராஸி செப்டம்பர் 5 திரைக்கு வருகிறது.
இது தவிர படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. அனைத்தையுமே படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறது. விரைவில் ஒவ்வொரு அறிவிப்பாக வரும் என்றும் தெரிகிறது.
துல்கர் சல்மானால் அப்செட்டில் சிவகார்த்திகேயன்
இது ஒரு புறம் இருக்க அதே செப்டம்பர் 5ஆம் தேதி துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் காந்தா படத்தை ரிலீஸ் செய்ய படகுழு திட்டமிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இது உறுதியான தகவலாக தான் இருக்கிறது.
இது மட்டும் நடந்தால் கடந்த ஆண்டு போலவே இந்த வருஷமும் பெரும் சம்பவம் ரசிகர்களுக்கு காத்திருக்கலாம். ஏனென்றால் கடந்த வருடம் துல்கரின் லக்கி பாஸ்கர் சிவகார்த்திகேயனின் அமரன் படங்கள் மோதியது.
இரண்டுமே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. அந்த வகையில் மீண்டும் இவர்கள் மோதுவது சபாஷ் சரியான போட்டி என சொல்ல வைத்திருக்கிறது.
எதுவாக இருந்தாலும் காந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியும். பார்க்கலாம் இந்த ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கிறது என்று.