குக் வித் கோமாளி டேஞ்சர் ஃசோனில் பிக் பாஸ் பிரபலம்  – Cinemapettai

Tamil Cinema News

விஜய் டிவியில் மெகா ஹிட் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குவது ‘குக் வித் கோமாளி’ தற்போது இந்த நிகழ்ச்சி தனது ஆறாவது சீசனில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில், நாமக்கல் புகழ் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மீண்டும் நடுவராக இணைந்துள்ளார்கள். அவர்களுடன் இந்த சீசனில் செஃப் கௌஷிக் புதிய அணியாக சேர்ந்து, நிகழ்ச்சிக்கு மேலும் வலு கூட்டியுள்ளார்.

பிரபலங்கள் பங்கேற்ற சுவாரசியமான நிகழ்ச்சி ஒரு புதிய கட்டத்திற்கு சென்றுள்ளது. இதில் ஷபானா, பிரியா ராமன், சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் மற்றும் பிக் பாஸ் ராஜு உள்ளிட்ட பத்து பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். கடுமையான போட்டிகளுக்கு பிறகு, சௌந்தர்யா மற்றும் கஞ்சா கருப்பு இருவரும் எலிமினேஷனில் வெளியேறி, ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுமிதாவின் திட்டமிட்ட சமையல் வெற்றி – டேஞ்சர் லிஸ்டில் சுந்தரி அக்கா & ராஜு

மதுமிதாவின் திட்டமிட்ட சமையல் வெற்றி – டேஞ்சர் லிஸ்டில் சுந்தரி அக்கா & ராஜு
Saturday எபிசொட் ல் Advantage Task-ல் வெற்றி பெற்ற Top 2 போட்டியாளர்கள் – உமர் மற்றும் தங்கதுரை அண்ட் பிரியா ராமன் மற்றும் குரேஷி, இந்த இரண்டு ஜோடியாக இருந்த நிலையில் இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சி உண்மையிலேயே செம கலகலப்பாக இருந்தது.

இதில் மதுமிதா தனது நன்கு திட்டமிட்ட சமையலால் நடுவர்களை கவர்ந்து முதலிடத்தை உறுதி செய்தார். அவரைப் பின் தொடர்ந்து உமைர், நந்தகுமார், ஷபானா, பிரியா ராமன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பாகச் செயல்பட்டு டாப் 6 பட்டியலில் இடம்பிடித்து Safe Zone-ல் நிம்மதியாக உள்ளனர்.

முதல்முறையாக டேஞ்சர் ஃசோனில் இடம் பிடித்த சுந்தரி அக்காவும் பிக் பாஸ் ராஜுவும், இன்றைய நாளில் 7 மற்றும் 8வது இடங்களை பிடித்தனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லையென்றாலும், இவர்களின் பெயர்கள் டேஞ்சர் லிஸ்டில் வந்தது ரசிகர்களிடம் கலக்கம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே வரும் வாரங்களில் தொடர்ந்தால் இவர்கள் இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆக வாய்ப்பு உள்ளது. இனி வரும் வாரங்களில் Danger Zone-ல் இருந்து இவர்கள் தப்பித்து விடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.