Cinema : இந்திய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது நாளொன்றுக்கு இத்தனை படங்கள் வீதம் வெளியாகி கொண்டிருக்கின்றன. முதலில் ஆண்டொன்றுக்கு ஒரு படம் வந்த காலமெல்லாம் மாறி தற்போது நாளொன்றுக்கு எத்தனை படங்கள் வெளியாகின்றன என கணக்கெடுக்கும் அளவிற்கு ஆகிவிட்டது சினிமா உலகம். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஜூலை மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் மற்றும் தமிழ் டப்பிங் படங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
பறந்து போ : இந்த படத்தில் நடிகர் சிவா மற்றும் அஞ்சலி ஆகியவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படம் ஜூலை-7ம் தேதி வெளியாக உள்ளது
3 BHK : இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீரா ரகுநாத் ஆகியவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சொந்த வீடு என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் இயக்கப்பட்டு இருக்கிறது. வருகிற ஜூலை-4 ம் தேதி வெளிவர இருக்கிறது.
சர்தார் 2 : இந்த படத்தில் நடிகர் கார்த்தி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடத்துனர். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
அக்கேனம் : இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அருண்பாண்டியன் அவர்கள் நடித்துள்ளனர். அப்பா மகள் கூட்டணி வெற்றியடையுமா பார்க்கலாம். இந்த இந்த படம் ஜூலை 4ம் தேதி வெளிவர இருக்கிறது.
உப்பு கம்புறம்பு : இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சுகாஸ் ஆகியவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
முகவரி : இந்த படம் ஜூலை 1ம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் அதர்வா மற்றும் இசக்கி பரத் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
சுதந்திரம் : இத்திரைப்படம் ஜூலை 10 அன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இதில் சசிகுமார், இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தேசிங்கு ராஜா 2 : திரைப்படத்தில் விமல்,ஜெகநாதன் மற்றும் சிலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 11 அன்று வெளிவரவிருக்கிறது.
காதி : நடிகை அனுஷ்கா செட்டி மற்றும் விக்ரம் பிரபு இணைந்து நடிக்கும் படம் தான் காதி. இத்திரைப்படம் ஜூலை 11 அன்று வெளிவரவிருக்கிறது.
பாரசிக ராஜா : சேரன் மற்றும் விஷால் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 16 அன்று திரைக்கு வரவிருக்கிறது.
பன் பட்டர் ஜாம் : இத்திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் மற்றும் ஆதிபிரசாத் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 18 அன்று திரைக்கு வரஇருக்கிறது.
சூப்பர் மேன் : 90ஸ் கிட்ஸ்களை மனம் கவர்ந்த சூப்பர் மேன். தற்போது மிகப்பெரிய அளவில் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளிவரவிருக்கிறது. இதுபோல் இன்னும் சில படங்கள் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கின்றன.