Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், நவீன் காவிரிக்கு சப்போர்ட் பண்ணுவதும் தனியாக கூப்பிட்டு பேசுவதையும் பார்த்த யமுனா சந்தேகத்துடன் நவீன் இடம் சண்டை போடுகிறார். யமுனா இப்படி தான் என்று நவீனும் புரிந்து கொண்டார். அதனால் யமுனா, நவீன் இடம் சண்டை போட வரும் பொழுது நவீன் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டதால் யமுனா சொல்வதை காது கொடுத்து கேட்காமல் போய்விடுகிறார்.
கடைசியில் யமுனா, நவீன் இடம் பேசி பிரயோஜனமே இல்லை என்று முடிவுக்கு வந்து ரூமுக்குள் போய் விடுகிறார். அதன் பின் ஹெட்சட்டை எடுத்துவிட்டு சந்தோஷத்தில் ஆடுகிறார். இதை பார்த்த யமுனா இன்னும் அதிகமாக கோபப்பட்டு இவரை திருத்தவே முடியாது என்று வழக்கம் போல் தவறாகவே புரிந்து கொண்டார். அத்துடன் இந்த சீரியலில் மக்கள் வெறுக்கும் கேரக்டர் யார் என்றால் யமுனா தான்.
ஏனென்றால் யமுனா, நவீனை பிளாக்மெயில் செய்துதான் கல்யாணம் பண்ணினார். அத்துடன் அவ்வப்போது சந்தேகப்பட்டு நவீனிடம் சண்டை போடுவதால் யமுனா கேரக்டர் டேமேஜ் ஆகிவிட்டது. அதனால் இந்த சீரியலில் இருந்து டார்ச்சரை அனுபவித்து இருப்பதற்கு பேசாமல் போய்விடலாம் என்று சீரியலை விட்டு விலகுகிறார்.
அதாவது இதுவரை யமுனா கேரக்டரில் நடித்து வந்த ஆதிரை என்பவர் இனி அவருடைய கேரக்டரை தொடர போவதில்லை. இவருக்கு பதிலாக இன்னொரு கதாநாயகி கமிட்டாகி இருக்கிறார். புதுசாக வரப்போகும் யமுனா என்பவர் காவேரி மற்றும் நவீனை புரிந்து கொண்டு சந்தோசமாக நவீனுடன் வாழும் விதமாக இருக்க வேண்டும் என்பதால் மக்களுக்கு பழைய யமுனா முகத்தை காட்டாமல் புதுசாக கொண்டு வருகிறார்கள்.